Masi Pachai: மாலையில் கட்டப்படும் இந்த இலை பற்றி தெரியுமா? கடவுளுக்கே விற்பனை செய்யலாம்..!

Photo of author

By Priya

Masi Pachai: நம்முடைய வாழ்க்கையில் நாம் அன்றாடம் நிறைய விஷயங்களை கடந்து செல்வோம். ஆனால் சற்று நின்று அதனை பற்றி நாம் ஒருபோதும் யோசித்தோ, அல்லது இதனை நாம் பயன்படுத்துவதால் என்ன பலன்கள், ஏன் இதனை பயன்படுத்துகிறோம் என நாம் சிந்தனை செய்வது இல்லை. அதே சமயம் அதனை பற்றி ஒரு சிலருக்கு ஆர்வம் இருந்து தேடி கண்டுப்பிடித்து அதனை பற்றி தெரிந்துக்கொள்வார்கள்.

அந்த வகையில் தான் நம் வாழ்க்கையில் நாம் நாள்தோறும் பார்க்கும் ஒன்று தான் மாலை. மாலை பொதுவாக எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. நல்ல விஷயங்கள் தொடங்கி ஒருவரின் இறப்பு வரை மாலை இடம் பெறுகிறது. அப்படி அந்த மாலையில் மலர்களுடன் வைத்து கட்டப்படும் இலை தான்  மாசி பச்சலை. இதனை ஒரு சிலர் வசிய துளசி, மாய துளசி, மாசி பத்திரி என்றெல்லாம் அழைப்பதுண்டு. காரணம் இதனை அவர்கள் பழக்கவழக்கங்களுக்கு ஏற்றவாறு பெயர் வைத்து அழைப்பதுண்டு. நாம் இந்த பதிவில் (masi pachai uses in tamil) மாசி பச்சலை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

மாசி பச்சலை – Masi Pachai

இதன் தாவரவியல் பெயர் ஆர்ட்டெமிசியா வல்காரிஸ் என்று அழைப்பார்கள். ஆங்கிலத்தில் mugwort, wormwood என்று கூறுவார்கள். அதனை மாசி பச்சலை அல்லது மாசி பத்திரி என்று கூறுவார்கள். மேலும் இது ஒரு மூலிகை செடியாகும்.

பயன்கள்

மாசி பச்சலை என்பது மூலிகை செடி. இதனை துளசிக்கு நிகராக பார்க்கப்படுகிறது. எனினும் துளசிக்கும், இதற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. கோயில்களில் தீத்தங்களில் இது கலந்து கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொடுப்பார்கள். இந்த செடி இயற்க்கையிலேயே நறுமணம் கொண்டது.

இந்த இலையை காயவைத்து பொடி செய்து தூபம் போட்டால் பூச்சிகளை விரட்டும் அதனால் பூச்சிக்கடிகளில் இருந்து நம்மை பாதுகாக்கலாம்.

இந்த இலையை வாதம், கல்லீரல் பிரச்சனை, ஆன்மை பிரச்சனை, உடல உஷ்ணம், சிறுநீர் கல் என்று பல வித பிரச்சனைகளுக்கு இது மருந்தாக பயன்படுகிறது.

மேலும் காயம் ஏற்பட்டால் இதன் பொடியை காயத்தில் பாேட உடனடியாக குணமாகும்.

இயற்கையாகவே உடலில் இருந்து துர்நாற்றம் வீசுபவர்களுக்கு, இந்த மாசி பச்சலையை உபயோகப்படுத்தினால் நல்ல தீர்வு கிடைக்கும்.

இந்த இலையை நேரடியாக எடுத்துக்கொள்ள கூடாது. மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த இலையில் இருந்து அதிகப்படியான நறுமணம் வருவதால் இந்த இலையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை நுகர்ந்தால் நரம்பு மண்டலத்தை பாதிக்கும்.

மேலும் அழகுகாக இந்த செடியை வீடுகளில் வளர்க்கப்படுகிறது.

மேலைநாடுகளில் இதனை ஆன்மீக ரீதியாகவும் பயன்படுத்தப்படுகிறது. வசியம் செய்வதற்காக பயன்படுத்தப்படுகிறது.

சாகுபடி

இந்த மாசி பச்சலை சாகுபடி செய்வதால் நல்ல வருமானம் பெறலாம். மேலும் இதனை வயல்களில் ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.

இந்த மாசி பச்சலையை விதையாக வாங்கி வந்து வந்து பயிரிடலாம். அல்லது செடியாக வாங்கி வந்து நட்டால் குறுகிய காலத்தில் அது எங்கும் படர்ந்து நல்ல விளைச்சல் கொடுக்கும்.

மேலும் விளைந்த இடத்தில் இருந்து பறித்து நீங்கள் வேறு இடத்தில் நடலாம்.

மேலும் இதனை பயிரிடப்பிறகு 3 மாத காலத்தில் அதாவது 80 நாட்களில் இதனை அறுவடை செய்துவிடலாம். அதன் பிறகு இதனை 40 நாட்களில் மீண்டும் அறுவடை செய்யலாம். இந்த செடி பூ பூக்கும் முன் அறுவடை செய்ய வேண்டும்.

குறைந்தது ஒருவர் அரை ஏக்கரில் இதனை பயிரிட்டால் தினசரி குறைந்தது 80 கிலோ வரை அறுவடை செய்யலாம். கிலோ ரூ.10க்கு மிகாமல் விற்கலாம்.

இந்த செடியை வளர்ப்பதற்கு தரையில் ஈரப்பதம் தேவைப்படும்.

மேலும் படிக்க: kummatti kai benefits: வழுக்கை தலையில் முடி வளர, சர்க்கரை நோய், உடல் எடை குறைக்க, இந்த ஒரு காய் போதும்..!! இது தெரியாம போச்சே..!!