கோவையில் முககவசம் கட்டாயம்!அரசு விடுத்த அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதித்த நகரமாக தொடர்ந்து சென்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அதனை முந்தியுள்ளது கோவை.சென்னையில் தினசரி பாதிப்பு 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. ஆனால் கோவையில் 5 ஆயிரத்தை நெருங்குகிறது.ஒரு மாதத்திற்கு முன்பு கோவையில் தினசரி பாதிப்பு ஆயிரம் என்ற அளவில் இருந்தது ஆனால் தற்போது நிலைமையின் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் நோய் பரவல் அதிகரித்த நிலையில் நோ கவசம் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது
மேலும் கோவையில் முகக் கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முககவசம் கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் இந்த அறிவிப்பில் அதிரடியாக வெளியிட்டு இருக்கிறார். அரசு தனியார் அலுவலகங்கள் பொது இடங்களில் தனிநபர் இடைவெளி முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வேலூர் திருவள்ளூர் காஞ்சிபுரம் தொடர்களிலும் கோவையிலும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது கோவையில் நேற்று ஒரே நாளில் 64 பேருக்கு கொரோனா பரவல் உறுதியானதை அடுத்து மாவட்ட ஆட்சியர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.