பல்லு போன கிழவியிடம் கைவரிசை காட்டிய முகமூடி கொள்ளையர்கள்!!

பல்லு போன கிழவியிடம் கைவரிசை காட்டிய முகமூடி கொள்ளையர்கள்!!

சேலம் மாவட்டத்திலுள்ள  மேட்டூர் அடுத்த நங்கவள்ளியில்  கத்தியை காட்டி மிரட்டி மூதாட்டியிடம்15 பவுன் நகை கொள்ளை அடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றது. மேட்டூர்ரை அடுத்த நங்கவள்ளி ஒன்றிய ஊராட்சி பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி ருக்மணி.இவருடைய வயது 60.

இந்த வயதான மூதாட்டி நேற்று காட்டு வேலை செய்துவிட்டு அசதியாக உள்ளது என்று வீட்டில் ஓய்வெடுத்தபடியே உறங்கியிருக்கிறார். இதை சாதகமாக பயன்படுத்தி நான்கு முகமூடி கொள்ளையர்கள் அதிகாலை 3 மணி அளவில் மூதாட்டி ருக்மணியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பீரோவில் இருந்த 12 பவுன் நகைகள் மற்றும் மூதாட்டி வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தையும் எடுத்துச் சென்றனர்.

மூதாட்டியின் கூச்சல் மற்றும்  அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். நடந்ததை மூதாட்டி ருக்மணி மூதாட்டி அக்கம் பக்கத்தில் இடம் கூறினார். பிறகு அங்கு வந்தவர்கள் காவல்துறையினருக்கு  தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த சேலம் மாவட்ட எஸ் பி ஸ்ரீ அபிநவ் மற்றும் ஓமலூர் மாவட்டத்தைச் சேர்ந்த டி எஸ் சங்கீதா ஆகியோர் ருக்மணியிடம் நேரில் விசாரணை செய்து வருகின்றனர்.

கொள்ளை தொடர்பாக நங்கவள்ளி போய் சார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். வயதான மூதாட்டியிடம் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை சபித்து வருகின்றனர் அப்பகுதி மக்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு சூழல் நிலவி வருகிறது.

Leave a Comment