பள்ளிகளில் முககவசம் கட்டாயம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!
கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடபட்டிருந்த நிலையில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.அதனை தொடர்ந்து தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனில் நடத்தப்பட்டது. போட்டி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.கடந்த ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லுரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது.
கடந்த மாதம் தான் அரையாண்டு தேர்வு நடைபெற்று 24 ஆம் தேதியில் இருந்து விடுமுறை அளிக்கப்பட்டது. சீனா, ஜப்பான், உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உருமாறிய கொரோனா பிஎப் 7 வைரஸ் மீண்டும் எழுச்சி பெற தொடங்கி உள்ளது.அதனால் சர்வதேச விமான நிலையங்களில் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது.
இருப்பினும் தமிழகத்தில் சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த பெண் மற்றும் அவருடைய குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து சீனாவில் ஜவுளி வியாபாரம் செய்து கொண்டிருந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் அங்கு கொரோனா பரவி வருவதால் சீனாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு குடும்பத்துடன் வந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதனால் மக்கள் மீண்டும் முககவசம் அணிய தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் பொது இடங்களில் முககவசம் கட்டாயம் என அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவ மாணவிகள் அனைவரும் முககவசம் அணிந்து வருகின்றனர்.புதிய வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.பொதுமக்கள் அனைவரும் பொது இடங்கள், கடற்கரை சாலை, பூங்காக்கள் ஆகிய இடங்களில் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி வருகின்றனர்.
பள்ளி,கல்லூரிகள் செல்லும் அனைத்து மாணவர்கள்,ஆசிரியர்கள்,மற்றும் இதர ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.இன்று காலை பள்ளிக்கு வந்த அனைத்து மாணவர்களும் அவர்களை பள்ளிக்கு அழைத்து வரும் பெற்றோர்களும் முககவசம் அணிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.