நகைக்கடை ஊழியர் செய்த மாபெரும் திருட்டு : சிசிடிவி கேமரா மூலம் கையும் களவுமாக சிக்கிய ஊழியர் !!

Photo of author

By Parthipan K

உதகமண்டலத்தில் (ஊட்டி) இயங்கி வரும் பிரபல நகைக்கடை ஒன்றில் சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமான தங்க நகைகளை எடுத்துக்கொண்டு, அதற்கு பதிலாக போலி நகைகளை வைத்து ஏமாற்றியதன் காரணமாக நகைக்கடை ஊழியர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஊட்டியில் இயங்கி வரும் செம்மனூர் நகைக்கடை ஒன்றில் சிறப்பு திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்களது பழைய நகைகளைக் கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக புதிய நகைகளை வாங்கிச் செல்லும் ஆஃபர் ஒன்றை வெளியிட்டது. இந்நிலையில் மேலாளர் தலைமையில் நடத்தப்பட்ட  மாதாத்திர ஆய்வின்போது 400 கிராம் எடை கொண்ட நகைகள் போலியாகவை என்பதும், அதற்கு பதிலாக கவரிங் நகையை கொடுத்து இருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து சந்தேகமடைந்த மேலாளர் சிசிடிவி கேமராவை சோதனை செய்து பார்த்தபோது , அங்கு பணிபுரிந்து வரும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கணபதி என்ற ஊழியர் 400 கிராம் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு அதற்கு பதிலாக கவரிங் நகை வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து உதகை மண்டலம் காவல் நிலையத்தில் மேலாளர் கொடுத்த புகாரின் பெயரில் உதகை மண்டலம் எஸ்பி சசிமோகன் அவர்களின் உத்தரவின் பெயரில் ஆய்வாளர் விநாயகம் தலைமையில் தனிப்படையமைத்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பதுங்கியிருந்த கணபதியை கைது செய்து அவர்களிடம் 400 கிராம் நகையை பறிமுதல் செய்தனர். மேலும் இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, பின்பு அவரை கோவை மத்திய சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டுள்ளனர்.