உலக அளவில் மாஸ் காட்டிய மாஸ்டர் பட பாடல்!ஹிட்டடித்த வாத்தி கம்மிங்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய்.இவருக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் என ஒரு தனி பட்டாளமே உள்ளது. மேலும் இவர் பல நாடுகளில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அங்காங்கே உருவாக்கியுள்ளார். இதற்கு இவரும் உழைப்பும் கடின முயற்சியும் தான் காரணம்.

வெறித்தனம் பாடலின் சாதனையை சமீபத்தில் தான் நாம் கேட்டு அறிந்தோம். அதனைத் தொடர்ந்து மாஸ்டர் படத்தின் பாடல்  உலக அளவில் எவ்வாறு வெற்றி அடைந்துள்ளது என்பதை இப்பதிவு விளக்குகிறது.

இயக்குனர் அட்லி இயக்கத்தில் இவர் நடிப்பில் சென்ற வருடம் வெளியாகிய பிகில் மிகப்பெரிய வெற்றி அடைந்து சாதனை படைத்தது.அதனைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் நடித்து வந்தார்.இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த பிறகும் இப்படம் திரையிடப்படவில்லை. இருந்தபோதிலும் இப்படத்திற்காக தளபதி ரசிகர் கூட்டம் பெரும் ஆவலோடும் உற்சாகத்தோடும் காத்துக்கொண்டிருக்கின்றன.

இந்த லாக் டவுன் முடிந்தவுடன் மாஸ்டர் திரைப்படம் திரையிடப்படும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடல் பெரிய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.உலக அளவில் மாஸ் காட்டிய மாஸ்டர் பட பாடல்!ஹிட்டடித்த வாத்தி கம்மிங்!கனடா நாட்டில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் மாப்பிள்ளை தனது நண்பர்களுடன் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி விஜயின்   கெத்தை  சினிமாஉலகத்திற்கு  வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடம் பெரும் அளவில் பரவி வருகிறது.

Leave a Comment