இபிஸ்ஸுக்கு எதிராக மேலிடம் போட்ட பக்கா பிளான்! சுதாரித்து கொள்வாரா எடப்பாடி?
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை விரைவில் அறிவித்து எடப்பாடி பழனிசாமி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதன் பிறகு தான் எடப்பாடி பழனிசாமி சற்று நிம்மதி அடைந்தார். இந்நிலையில் அவருக்கு அடுத்த ஷாக் நியூஸ் வந்துள்ளது.
அதிமுகவில் இரட்டை தலைமை இருந்த போது, பாஜகவிற்கு கட்டுப்பட்டிருக்க வேண்டிய நிலை இருந்தது. தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்றே கூறலாம். தற்போது அதிமுக இபிஎஸ் வசம் சென்றதில் இருந்தே அதிமுக மீண்டும் முன்பு போல செயல்படும் என்றும் இழந்த ஆதரவை மீண்டும் பெற்றுவிடும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். உட்கட்சி பூசல் எல்லாம் முடிந்துவிட்டதால் இனி அரசியலில் முழு கவனம் செலுத்துவார்கள். இதனால் திமுகவுக்கு பயம் வந்துவிட்டது.
எனவே திமுக அரசு அதிமுக தலைமைக்கு நெருக்கடி கொடுக்க தயாராகி விட்டதாக கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிமுக மீது கவனம் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியிருந்தார்.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து இந்த 21 மாதங்கள் ஆன பிறகும் கூட ஒரு முன்னாள் அமைச்சர் கூட லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் கீழ் கைது செய்யப்படவில்லை. மற்ற சில அமைச்சர்களின் வீடுகள், அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமியை குறிவைத்து ரெய்டு ஏதும் நடத்தப்படவில்லை, விசாரணையும் நடைபெறவில்லை. அடுத்ததாக கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இபிஎஸ் விசாரிக்கப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில் அவருக்கு நெருக்கமானவர்கள், உதவியாளர்கள் என பலரும் விசாரிக்கப்பட்டனர்.
ஆனால் அப்போதும் இபிஎஸ்ஸிடம் விசாரணை நடத்தப்படவில்லை. கொடநாடு பிரச்சனையை வைத்து திமுக அரசியல் செய்ய முயற்சித்தது. ஆனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது இபிஎஸ் சாதூர்யமாக அதை திமுக பக்கமே திருப்பி விட்டார். அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் கொடநாடு வழக்கில் கைது நடந்தது. ஆனால் திமுக ஆட்சியில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. எனவே திமுகவுக்கும் அவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று இபிஎஸ் கேள்வி எழுப்பினார்.
எனவே இதற்கு மேலும் சும்மா இருக்க கூடாது என முடிவு செய்த மேலிடம் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் இபிஎஸ்க்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் லஞ்ச ஒழிப்புத்துறை இபிஎஸ் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதாவை சொத்து குவிப்பு வழக்கு விடாமல் துரத்தியதை போல மிகவும் வலுவானதாக இந்த வழக்கும் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம். எனவே இபிஎஸ்க்கு அடுத்த பிரச்சனை தயாராக உள்ளதாக தெரிகிறது.