மோசமான வானிலை காரணமாக 2 ஆவது டி 20 போட்டி தொடங்குவதில் தாமதம்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி 20 போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருந்தது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஸ்திரேலிய அணி 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி நேற்று பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி கே எல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரின் அதிரடி அரைசதத்தால் 208 ரன்கள் சேர்த்தது.
இதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்த இலக்கை 19.2 ஓவர்களில் எட்டியது. அந்த அணியின் கேமரூன் கிரின் மற்றும் மேத்யு வேட் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தின் மூலம் கடினமான இலக்கை எட்டியது. இந்த போட்டியில் இந்திய அணியின் பவுலிங் மற்றும் பீல்டிங் மிக மோசமாக இருந்தது.
இந்நிலையில் இன்று இரு அணிகளும் மோதும் இரண்டாவது டி 20 போட்டி நாக்பூரில் நடக்க உள்ளது. இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக இந்த போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் டாஸ் போடப்படவில்லை. அந்த பகுதியில் மழையும் பெய்து வருகிறது. இந்த போட்டியில் காயத்தில் இருந்து மீண்ட பூம்ரா மீண்டும் அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் வேறு எந்த மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.