போட்டியின் முடிவை மாற்றிய ஒரு ஓவர்…  கடைசி நேரத்தில் மேத்யு வேட் செய்த அதகளம்

Photo of author

By Vinoth

போட்டியின் முடிவை மாற்றிய ஒரு ஓவர்…  கடைசி நேரத்தில் மேத்யு வேட் செய்த அதகளம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் ஆஸி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஸ்திரேலிய அணி 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி நேற்று பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி கே எல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்ட்யா  ஆகியோரின் அதிரடி அரைசதத்தால் 208 ரன்கள் சேர்த்தது.

200 ரன்களுக்கு மேல் சென்றாலே அந்த இலக்கை இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணி துரத்தி வெற்றி பெறுவது கடினமான ஒன்று. ஆனால் ஆஸி அணி இந்தியாவை விட சிறப்பாக வெற்றி பெற்று இந்த இலக்கை 19.2 ஓவர்களில் எட்டியது. அந்த அணியின் கேமரூன் கிரின் மற்றும் மேத்யு வேட் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தின் மூலம் கடினமான இலக்கை எட்டியது. இந்த போட்டியில் இந்திய அணியின் பவுலிங் மற்றும் பீல்டிங் மிக மோசமாக இருந்தது.

அதுவும் கடைசி கட்டத்தில் மேத்யு வேட் சிறப்பாக விளையாடி ஆஸி அணியின் பக்கம் வெற்றியை திருப்பினார். 3 ஓவர்களில் 40 ரன்கள் தெவை என்ற நிலையில் ஹர்ஷல் படேல் வீசிய ஓவரில் 3 சிக்ஸர்கள் உள்பட 22 ரன்கள் சேர்க்கப்பட்டது. இந்த ஓவர்தான் போட்டியை மாற்றும் ஓவராக அமைந்தது. அந்த ஓவரில் ஹர்ஷல் படேல் குறைவான ரன்களை கொடுத்திருந்தால் ஆஸி அணியின் மேல் அதிகமான அழுத்தம் ஏற்பட்டு இருக்கும். போட்டியின் முடிவைக் கூட அது மாற்றி இருக்கலாம்.