நாய்களுக்கு மேட்ரிமோனியல் இணையதளம்! கேரளா மாணவர் அசத்தல்!
இந்த காலத்தில் திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடுவது மிகவும் கடினமாக இருக்கும் நிலையில் கேரளா மாநிலத்தில் மாணவர் ஒருவர் நாய்களுக்கு மேட்ரிமோனியல் இணையதளம் தொடங்கியுள்ளார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகின்றது.
கேரளா மாநிலத்தின் கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் அபின் ஜாய் என்ற மாணவர் தான் நாய்களுக்கான மேட்ரிமோனியல் இணையதளத்தை தொடங்கி இருக்கிறார். மாணவர் அபின் ஜாய் அவர்கள் செல்லப் பிராணிகளுக்கு துணை தேடுவதற்காக இந்த பிரத்யேக முயற்சியை முன்னெடுத்துள்ளார்.
மாணவர் அபின் ஜாய் அவர்கள் செல்லப் பிராணிகளுக்கு துணை தேடுவதற்காகவே vet.igo.in என்ற இணையதளத்தையும் அவர் தொடங்கிய இருக்கிறார். மேலும் இந்த இணையதளத்தை பயன்படுத்தி நாய்களுக்கான துணையை தேடிக் கொள்ளலாம்.
இது பற்றி மாணவர் அபின் ஜாய் அவர்கள் “நான் உருவாக்கியுள்ள இந்த இணையதளம் தான் செல்லப் பிராணிகளுக்கான முதல் மேட்ரிமோனியல் வெப்சைட் ஆகும். இந்த வெப்சைட் மூலமாக கால்நடைகளுக்கான ஆலோசனைகளும் வழங்கப்படும்.
இந்த இணையதளத்தில் செல்லப் பிராணிகள் குறித்த விவரங்கள் புகைப்படங்கள் என அனைத்து தகவல்களையும் பதிவிட வேண்டும். அப்பொழுது தான் செல்லப் பிராணிகளுக்கு சரியான துணைகளை தேட முடியும்.
தற்பொழுது இந்த வலைதளத்தினை நீங்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். சில மாதங்கள் சென்ற பிறகு நான் இந்த வலைதளத்தை பயன்படுத்த குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயம் செய்யப் போகிறேன்.
தற்பொழுது நாய்களுக்கு மட்டுமே நான் மேட்ரிமோனியல் வலைதளத்தை உருவாக்கி இருக்கிறேன். கூடிய விரைவில் பூனைகளுக்கும் மற்ற செல்லப் பிராணிகளுக்கும் துணை தேடும் வகையில் இந்த வலைதளத்தை மாற்றுவேன்” என்று அவர் கூறியுள்ளார்.