காதில் படியும் மெழுகு அழுக்குகளை நீக்க ஆபத்தான பட்ஸ் வேண்டாம்!! இதை செய்யுங்கள் போதும்!!

0
260
No dangerous earwax removal buds!! Just do this!!
No dangerous earwax removal buds!! Just do this!!

காதில் படியும் மெழுகு அழுக்குகளை நீக்க ஆபத்தான பட்ஸ் வேண்டாம்!! இதை செய்யுங்கள் போதும்!!

நம் காதுகளில் படியும் அழுக்குகள் மெழுகு போன்ற வடிவில் உருவாகும்.இவை பழுப்பு,அடர் பழுப்பு,ஆரஞ்சு உள்ளிட்ட நிறங்களில் இருக்கும்.இந்த அழுக்குகள் காதில் குடைச்சலை ஏற்படுத்துவதால் அதை வெளியேற்றுவதற்காக சிலர் பட்ஸ் பயன்படுத்துகின்றனர்.

இதனால் காதிற்குள் வலி,வீக்கம்,எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.சில நேரம் பட்ஸில் உள்ள காட்டன் பஞ்சு காதிற்குள் ஒட்டிக் கொள்ளும்.இதனால் காலப்போக்கில் காது கேளாமை பிரச்சனை ஏற்படும்.

தொடர்ந்து பட்ஸ் பயன்டுத்துவதால் காதுகளில் புண்கள் ஏற்பட்டு சீழ் படிய ஆரம்பித்து விடும்.சிலருக்கு காது ஜவ்வில் பாதிப்பு ஏற்படும்.ஒரு சிலருக்கு காதுகளில் அழுக்கு இல்லை என்றாலும் பட்ஸ் பயன்படுத்தும் பழக்கம் இருக்கும்.இதனால் காதுகளில் அதிகளவு இரைச்சல் உண்டாகும்.

எனவே காதுகளில் படியும் அழுக்குகளை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு பாதுகாப்பான முறையில் வெளியேற்றுவது குறித்து தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

*உப்பு
*தண்ணீர்

1/4 கிளாஸ் தண்ணீர் சிறிது கல் உப்பு சேர்த்து சூடாக்கி கொள்ளவும்.இதை ஆறவிட்டு காதுகளின் ஓட்டைக்குள் ஊற்றவும்.இவ்வாறு செய்தால் சில நிமிடங்களில் காதுகளில் படிந்து கிடக்கும் அழுக்குகள் உப்பு நீர் மூலம் வெளியேறி விடும்.பிறகு காட்டன் துணி பயன்படுத்தி காதுகளை துடைத்துக் கொள்ளவும்.

*பூண்டு
*தேங்காய் எண்ணெய்

5 தேக்கரண்டி தேங்காய் எண்ணையில் ஒரு பல் பூண்டை இடித்து போட்டு காய்ச்சிக் கொள்ளவும்.இந்த எண்ணெயை ஆறவிட்டு தினமும் 3 துளிகள் காதுகளில் விட்டு வந்தால் அழுக்கு,தூசு முழுமையாக நீங்கும்.

*விளக்கெண்ணெய்

சில துளிகள் விளக்கெண்ணெய் எடுத்து காதுகளில் விட்டால் அழுக்கு,கிருமி தொற்றுகள் முழுமையாக வெளியேறி விடும்.