உங்கள் வாழ்க்கை மற்றும் குடும்பம் எப்போதும் நன்றாக இருக்க.. நினைத்த நல்ல காரியம் அப்படியே நடக்க இதை மட்டும் செய்யுங்கள்!!

Photo of author

By Divya

உங்கள் வாழ்க்கை மற்றும் குடும்பம் எப்போதும் நன்றாக இருக்க.. நினைத்த நல்ல காரியம் அப்படியே நடக்க இதை மட்டும் செய்யுங்கள்!!

நம் வாழ்க்கை நன்றாக மகிழ்ச்சி நிறைந்து இருக்க வேண்டுமென்றால் நமக்கு கடவுளின் அருள் அவசியம் இருக்க வேண்டும். நம்மையும் நம் குடும்பத்தையும் காக்கும் கடவுளுக்கு தினமும் அன்றைய நாள் இரவு தூங்குவதற்கு முன் நன்றி தெரிவிப்பதன் மூலம் வாழ்வில் மேலும் முன்னேற்றம் காண முடியும்.

உங்கள் வாழ்க்கை மற்றும் குடும்பம் எப்போதும் நன்றாக இருக்க.. நினைத்த நல்ல காரியம் அப்படியே நடக்க செய்ய வேண்டியவை:-

இது மிகச் சிறிய விசயமாகத் தோன்றலாம். ஆனால் ஒரே மாதத்தில் நல்ல பலன் கொடுக்கக் கூடியது.

ஒரு நாள் முழுக்க உங்கள் வேலைகள் எதுவாக இருந்தாலும் முடித்து இரவு தூங்குவதற்கு முன் இதை மனதார சொல்லிய பின் தூங்கவும்.

“எனை ஆளும் என் இறை சக்தியே, என் பிரபஞ்ச சக்தியே… இன்றைய பொழுது எனக்கு நல்லதாக அமைத்துக் கொடுத்ததற்காக நன்றிகள் உரித்தாகட்டும்.

அது மட்டும் அல்லாமல் இன்றைய தினத்தில் அறிந்தோ அறியாமலோ நான் யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்” என்று கூறவும்.

நன்றி கூறும்போது இறைவன் மகிழ்ந்து நீங்கள் வேண்டிய வரத்தை உடனே தருவான் என்பது ஐதீகம்.

இந்த மந்திரச் சொற்கள் (நன்றி – மன்னிப்பு) தரும் பலன்கள் எண்ணிலடங்காது.