உருவாகின்றது மாயவன் 2 திரைப்படம்!!! மீண்டும் இணைந்த நடிகர் சந்தீப் கிஷன் இயக்குநர் சி.வி குமார் கூட்டணி!!!

Photo of author

By Sakthi

உருவாகின்றது மாயவன் 2 திரைப்படம்!!! மீண்டும் இணைந்த நடிகர் சந்தீப் கிஷன் இயக்குநர் சி.வி குமார் கூட்டணி!!!

இயக்குநர் சி.வி குமார் மற்றும் நடிகர் சந்தீப் கிஷன் கூட்டணியில் வெளியான மாயவன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளது என்றும் படத்தின் படப்பிடிப்பு பற்றியும் தகவல்கள் கிடைத்துள்ளது.

பிரபல சினிமா தயாரிப்பாளரான சி.வி குமார் அவர்கள் அட்டகத்தி, இறுதிச் சுற்று, காதலும் கடந்து போகும், இறைவி, இன்று நேற்று நாளை போன்ற பல படங்களை தயாரித்துள்ளார். இதையடுத்து 2017ம் ஆண்டு வெளியான மாயவன் திரைப்படத்தை இயக்கி தயாரிப்பாளராக இருந்த சி.வி குமார் இயக்குநராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

சி.வி குமார் அவர்கள் இயக்கத்தில் உருவான மாயவன் திரைப்படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்திருந்தார். லாவண்யா திரிபாதி அவர்கள் நடிகையாக அறிமுகமானார். தமிழ் மற்றும் தெலுங்கு என்ற இரண்டு மொழிகளில் உருவான மாயவன் திரைப்படத்தை சி.வி குமார் அவர்களே தயாரித்திருந்தார்.

வித்தியாசமான கதையை கொண்டு சையின்ஸ் பிக்சன் திரில்லராக உருவான மாயவன் திரைப்படத்தின் திரைக்கதையில் படக்குழு சிறிது கோட்டையை விட்டது. இதனால் மாயவன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை.

இந்நிலையில் மாணவன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாகப் போகின்றது. இந்த திரைப்படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் அவர்களே கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் சி.வி குமார் அவர்களே மாயவன் 2 திரைப்படத்தையும் இயக்குகிறார். மாயவன் 2 திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் அவர்கள் இசை அமைக்கிறார்.

மாணவன் 2 திரைப்படத்திற்கு தெலுங்கில் “புராஜெக்ட் ஜெட்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மாயவன் 2 திரைப்படத்தின் பூஜை ஹைதராபாத்தில் நடைபெற்றதாகவும் மாயவன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் முதல் தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. நடிகர் சிரஞ்சீவி நடித்த போலா சங்கர் திரைப்படத்தை தயாரித்த அனில் சுங்கரா அவர்கள் இந்த திரைப்படத்தை இன்னொரு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். மாயவன் 2 திரைப்படத்தின் பூஜையின் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.