அதிமுக பாஜகவுடன் மதிமுக கூட்டணி?  விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த வைகோ!

0
48
Vaiko
Vaiko

மறுமலர்ச்சி முன்னேற்றக்கழகம் தற்போது திமுக கூட்டணியில் உள்ளது. அண்மையில் வைகோவின் மகன் துரை வைகோ எங்களுக்கு இந்த முறை 12 தொகுதிகளுக்கு மேல் வேண்டும் எனவும், இது பற்றி திமுகவுடன் பேசுவோம் எனவும், நிறைய தொகுதிகள் கொடுத்தால் எங்கள் பலத்தை காட்டுவோம் எனவும் பேட்டி கொடுத்தார்.

அதேபோல பாஜக கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக கூட்டணியில் உள்ள ஒரு முக்கியமான கட்சியுடன் கூட்டணி குறித்து பேசி வருவதாக அண்மையில் பேட்டி கொடுத்தார். அந்த கட்சி மதிமுக தான் எனவும், வைகோ பாஜக அதிமுக கூட்டணிக்கு செல்வது உறுதி எனவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த வதந்தி அனைத்திற்கும் வைகோ முற்றுப்புள்ளி வைத்துள்ளார். திராவிட இயக்கத்தை காப்பதற்காக 2017ஆம் ஆண்டு திமுகவுடன் கைகோர்த்த தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை. வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் மதிமுக கட்சிக்கு இல்லை. ரகசியமாக கூட்டணி பற்றி பேசும் பழக்கமும் எங்களுக்கு எப்போதும் இருந்ததில்லை எனவும் பேட்டி கொடுத்துள்ளார் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ.

Previous articleஜனநாயகன் தான் விஜய்யின் கடைசி படமா? தளபதி ரசிகர்களுக்கு நடிகை சொன்ன ஹேப்பி நியூஸ் !
Next articleரஜினிக்கும் தனுசுக்கும் உள்ள வித்தியாசம் இது தான்! நாகர்ஜுனா ஓபன் டாக்!