இன்று இங்கு இறைச்சி கடைகள் செயல்படாது! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!
இன்று பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் கும்பாபிஷேகம் விழா காலை நடைபெற்றது.அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.அந்த உத்தரவில் பழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று கோழி,ஆடு,மீன் மற்றும் மாடுகளை வதம் செய்வதும் அதனை இறைச்சியாக விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் நகராட்சி எல்லைக்குள் பன்றி வளர்கவோ அல்லது அதனை வதைசெய்யவோ அனுமதி கிடையாது.பழனி நகராட்சிகுட்பட்ட பகுதிகளில் ஆடு ,கோழி,மீன் மற்றும் மாடு இறைச்சிக்கடைகள் மூடப்பட்டிருக்கும்.இந்த உத்தரவை மீறி செயல்பட்டால் அவர்களின் மீது நகராட்சி சார்பில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்டும்.
மேலும் கும்பாபிஷேகம் நடைபெறும் பொழுது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதனால் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருபதற்கு ட்ரோன் காமிராக்கள் பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதுதாராபுரம் சாலையில் மால்குடி மருத்துவமனை பகுதியில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் மற்றும் கோவை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் அனைத்தும் பைபாஸ் சாலை மார்க்கமாக தற்காலிக பேருந்து நிலையத்திற்கு செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அங்கிருந்து பழனி நகருக்குள் செல்வதற்கு இலவச அரசு டவுன் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.