ஆரதவற்ற குழந்தைகளுக்கு மருத்துவ காப்பீடு திட்டம்!! அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!!

0
292
Medical insurance scheme for underprivileged children!! Important information given by the minister!!
Medical insurance scheme for underprivileged children!! Important information given by the minister!!

ஆரதவற்ற குழந்தைகளுக்கு மருத்துவ காப்பீடு திட்டம்!! அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!!

தமிழகத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசால் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கொரோனாவிற்கான தடுப்பூசி எதுவும் இல்லாத நிலையில், பாதிப்புகள் அதிகரித்து, உயிரிழப்புகளும் அதிகமாக ஏற்பட்டது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குழந்தைகளுக்கு பல நலத்திட்டங்கள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. அதில் அந்த குழந்தைகளுக்கான மருத்துவ காப்பீடும் ஒன்று. அதன்படி அவர்களுக்கு எந்தவித கட்டணமும் வாங்காமல் மருத்துவ சிகிச்சை பெற தமிழக அரசின் காப்பீடு அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 1320 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக மற்ற ஆதரவற்ற குழந்தைகளுக்கும், அதாவது திடீர் மரணங்கள், சாலை விபத்துகள், வேறு விதமான நோய்களினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்கள் ஆகியோரின் குழந்தைகளுக்கும் காப்பீடு திட்டம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த கோரிக்கை பற்றி சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மட்டுமில்லாது, கீழ்பாக்கத்தில் உள்ள மன நல காப்பகத்தில் இருப்பவர்களுக்கும் காப்பீடு அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பெற்றோர்களை இழந்த, ஆதரவற்ற குழந்தைகளுக்கும் மருத்துவ காப்பீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் ஆலோசனை செய்து, அவர்களும் விரைவில் இந்தத் திட்டத்தில் இணைக்கப் படுவார்கள் என கூறினார்.

Previous articleசேலத்து மக்களுக்கு குட் நியூஸ்!! ஏற்காடு செல்ல அரசின் புதிய ஏற்பாடு!!
Next articleசுப்மான் கில்லின் அதிரடி சதம்! இறுதிப் போட்டிக்குள் நுழைந்த குஜராத் டைட்டன்ஸ்!!