சுப்மான் கில்லின் அதிரடி சதம்! இறுதிப் போட்டிக்குள் நுழைந்த குஜராத் டைட்டன்ஸ்!!

0
146
#image_title
சுப்மான் கில்லின் அதிரடி சதம்! இறுதிப் போட்டிக்குள் நுழைந்த குஜராத் டைட்டன்ஸ்!
நேற்று அதாவது மே 26ம் தேதி நடைபெற்ற இரண்டாம் குவாலிபையர் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்று இறிதிப் போட்டிக்குள் நுழைந்தது.
நேற்று அதாவது மே 26ம் தேதி அஹமதாபாத்தில் நடைபெற்ற இரண்டாம் குவாலிபையர் சுற்றில் ஹார்திக் பாண்டியா தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ரோக்ஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடியது.
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா  பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்தது. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணியில் சஹா 18 ரன்களுக்கு ஆட்டமிழக்க தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சுப்மான் கில் சதம் அடித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த சாய் சுதர்சன் 43 ரன்கள் சேர்த்து ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். தொடர்ந்து விளையாடிய கில் 129 ரன்கள் சேர்த்தார். ஹார்திக் பாண்டியா 28 ரன்கள் சேர்த்தார்.
இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் சேர்த்தது. பியூஸ் சாவ்லா, ஆகாஸ் மத்வால் இருவரும் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதையடுத்து 234 என்ற பெரிய இலக்கைக் கொண்டு மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க வீரர் ரோஹித் சர்மா 8 ரன்களுக்கும், நேஹல் வதேரா 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். பின்னர் களமிறங்கிய திலக் வர்மா அதிரடியாக விளையாடத் தொடங்கினார். அதிரடியாக விளையாடி திலக் வர்மா 14 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கேமரூன் கிரீன் 30 ரன்களுக்கு ஆட்டமிழக்க தொடர்ந்து அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த அரைசதம் அடித்து 61 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இவருக்கு பின் களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க மும்பை இந்தியன்ஸ் அணி 18.2 ஓவர்களில் 171 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது. குஜராத் டைட்டன்ஸ் அணியில் பந்துவீச்சில் சிறப்பாக பந்துவீசி மொஹித் சர்மா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முகமது ஷமி மற்றும் ரஷித் கான் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுதது குஜராத் டைட்டன்ஸ் அணி 62 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நாளை அதாவது மே 28ம் தேதி நடைபெறும் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதவுள்ளது.