தேங்காய் எண்ணெயின் மருத்துவ பயன்கள்! இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு!

0
156

தேங்காய் எண்ணெயின் மருத்துவ பயன்கள்! இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு!

ஒரு சிலருக்கு இடுப்பில் இறுக்கமாக ஆடை அணிவதால் இடுப்பைச் சுற்றி கறுப்புத் தழும்பு ஏற்படும். அவ்வாறு ஏற்படும் இடுப்புக் கறுப்பு தழும்பு மறைவதற்கு இறுக்கமான ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். மேலும் கறுப்பு தழும்பு ஏற்பட்ட இடத்தில் தேங்காய் எண்ணெயை தடவி லேசாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக இடுப்புக் காய்ப்புத் தழும்பு மறைந்துவிடும்.

தற்போது மழைக்காலம் ஒரு சிலருக்கு மழைக்கால புண் ஏற்படும் அந்த மழைக்காலம் புண் மறைய மழைக்காலத்தில் வெளியில் சென்று வந்த பின் உப்பு நீரில் காலை நன்றாக கழுவி பின் தேங்காய் எண்ணெயில் மஞ்சள் தூளைப் போட்டுக் குழைத்து இரவில் பாதங்களின் மேல்புறமும் விரல் இடுக்கிலும் பூசிக்கொண்டு படுத்தால் காலையில் பாதங்கள் பளிச்சென்று இருப்பதுடன் எரிச்சல் இல்லாமலும் இருக்கும்.

மேலும் பனிக்கால வெடிப்பு மறைய தேன், நெய் ,தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் மஞ்சள் தூள் ஆகியவற்றைக் கலந்து பாத வெடிப்புகளில் தடவி வந்தால் பனிக்கால வெடிப்பு மறையும்.

 

 

Previous articleஉங்களின் முழங்கை கருப்பாக உள்ளதா? உடனடியாக இதனை மட்டும் செய்து பாருங்கள்!
Next articleபுதுவை ஜிப்மர் மருத்துவமனையில் 400க்கும் மேற்பட்ட செவிலியர் அதிகாரி பணியிடங்கள்! முழு விவரங்கள் இதோ!