ஆரஞ்சு பழத்தின் மருத்துவ குணம்! பெண்களே இதை கட்டாயமாக ட்ரை செய்து பாருங்கள்!
பெண்களுக்கு கன்னப் பகுதியிலும் கருமை படர்ந்து திட்டுத் திட்டாக இருக்கும் அந்தக் கருமையை விரட்டியடிக்க 1 கைப்பிடி வேப்பங்கொழுந்துடன், ஆரஞ்சு தோல் விழுது மற்றும் கஸ்தூரி மஞ்சள் கலந்து எந்த இடத்தில் எல்லாம் கருமை படர்ந்து இருக்கிறதோ, அங்கெல்லாம் பூசி 5 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.ஆரஞ்சுபழத்தோல்களுடன் பால் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி காயவைத்து கழுவினால் முகம் புத்துணர்ச்சி பெறும்.
ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர் உடன் முல்தானிமட்டி, சந்தனம் ஆகிய மூன்றும் ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும்.
ஆரஞ்சு சாற்றை மட்டும் பழ பேக்காக முகத்துக்கு போட்டு வர பேசியல் செய்தது போல் முகம்பிரகாசமாக காணப்படும். மேலும் பெண்கள்
ஆரஞ்சு ஜுஸ் தினமும் குடித்து வரவேண்டும். அவ்வாறு குடிக்கும் போது உடல் சிவப்பாக மாறுவதை காணலாம். நம் தேகத்துக்கும் வசிகரத்தை அள்ளித் தரக்கூடியது ஆரஞ்சு பழம்.
முகத்தில் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் இருந்தால் ஆரஞ்சு தோல் அரைத்த விழுது, கசகசா விழுது, மற்றும் சந்தனப் பவுடர் இவற்றைகெட்டியான விழுதாக்கிக் கொள்ளுங்கள். தினமும் இரவு தூங்கப் போகும் போது, பருக்கள் வந்த இடத்தில் தடவி வந்தால் வடுக்கள் மறையும் என கூறப்படுகிறது.