பல்வலியை போக்கும் எளிய மருத்துவம்!!

Photo of author

By Pavithra

பல்வலியை போக்கும் எளிய மருத்துவம்!!

Pavithra

pal vali sariyaga tips in tamil

pal vali sariyaga tips in tamil : குழந்தையை பெற்றெடுக்கும் வலியை கூட தாங்கிக் கொள்ளலாம். ஆனால் இந்த பல் வலியை தாங்க முடியாது என்று பெரியோர்கள் பழமொழியாக கூறுவர்.ஆம் இந்த பல் வலி என்பது தாங்கிக் கொள்ள முடியாத ஒன்றாகும்.பல் வலி ஏற்படும் காரணமும் மற்றும் அதனை சரி செய்ய இயற்கை எளிய மருத்துவமும்?

பல் வலி ஏற்பட காரணம்?

முதலில் நாம் சரியாக பல் துலக்கா விட்டாலும், நமது உணவு பொருட்கள் பல்லின் இடுக்கில் மாட்டிக்கொண்டு அதனை நாம் சரியாக சுத்தம் செய்யாமல் விட்டுவிட்டாலும், சொத்தை பல் ஈறு வலி ஏற்படுவதற்கு அதிக காரணிகள் உள்ளது.இந்த சொத்தை பல் ஆரம்பகட்டத்தில் தெரியாது நாள் போகப்போக பற்கள் அரித்த பிறகே நமக்கு பல்லியின் வலி தெரிய ஆரம்பிக்கும்.திடீரென்று ஆரம்பிக்கும் இந்த வலியை தாங்கிக்கொள்ளவே முடியாது.மேலும் சிலருக்கு பல் கூச்சம் போன்ற பிரச்சினைகளும் இருக்கக்கூடும் இவர்றை சரி செய்ய சில எளிய மருத்துவ முறைகள் உள்ளன.

பல்வலியை போக்கும் இயற்கை மருத்துவம்?

சொத்தை பல்லால் அதிக வலியும் வீக்கமும் ஏற்பட்டால் சொத்தை ஏற்பட்ட பல்லில் சிறிதளவு மஞ்சள் தூளை வைத்து சிறிது நேரம் கழித்து வாய் கொப்பளித்தால் பல்வலி குறையும்.

வேப்பிலையை நன்றாக கழுவி சுத்தம் செய்து தண்ணீரில் கொதிக்க வைத்து வெதுவெதுப்பான நீரில் தினமும் இரவு வாய்க்கொப்பளித்து வருகையில் பல் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனைகளும் நம்மை அண்டாது.

பல் வலி அதிகமாக உள்ள போது குப்பைமேனி தலையுடன் சிறிது உப்பை வைத்து சொத்தைப்பல் ஏற்பட்ட இடத்தில் வைத்து அந்த சாறு உள்ளே இறங்கும் வரை வாயில் அடக்கிக் கொண்டால் பல்வலி குறையும்.

கொய்யா இலையுடன் சிறிதளவு கிராம்பை சொத்தைப் பல்லின் மீது வைத்து அடக்கி கொண்டால்லும் சொத்தைப்
பல்வலி குறையும்.