மீனம் இன்றைய ராசிபலன்: எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்

0
167
Meenam - Guru Vakra Peyarchi Palan 2021 in Tamil Meena Rasi
Meenam - Guru Vakra Peyarchi Palan 2021 in Tamil Meena Rasi

மீனம் இன்றைய ராசிபலன்: எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையுடன் காண வேண்டிய நாள். இன்றைக்கு உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் உள்ளதால் சங்கடமான சூழ்நிலைகள் அமையும். எதையும் பேசுவதற்கு முன் சிந்தித்து ஆராய்ந்து பேசுவது நல்லது.

குடும்ப உறவுகளில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வாழ்க்கைத் துணை வழி உறவினர்கள் மூலம் சில பிரச்சனைகள் வரலாம். பொருளாதாரம் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் என்றாலும் வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகும்.

உத்தியோகத்தில் மனவருத்தம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில பிரச்சனைகள் வரலாம். அரசியலில் இருக்கும் நண்பர்கள் பேசும் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. கலைத்துறையில் இருக்கும் நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வீண் மன குழப்பம் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உடலில் ஒரு சில சோர்வு அசதி வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் எடுத்துக் கொள்வது நல்லது.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் காண வேண்டும் என்றால் கடுமையாக பாடுபட வேண்டி வரும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் எடுக்கும் முயற்சிகளில் காலதாமதம் ஆகிறது என்ற கவலைகள் அவர்களுக்கு வரும். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருப்பது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குரு பகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபாவை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடக்கிறோம்.

Previous articleஇந்த ராசிக்காரர்களுக்கு இன்று மன உறுதி அதிகமாக காணப்படும்!
Next articleகும்பம் இன்றைய ராசிபலன்: குழப்பங்கள் விலகும் நாள்