நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன் கிடைக்குமா? நீதிமன்றம் சொல்வது என்ன?
நடிகை மீரா மிதுன் சர்ச்சைகளுக்குப் பஞ்சம் இல்லதாவர்.இவர் பலரையும் விமர்சனம் செய்து பேசி வருவதையே வாடிக்கையாகக் கொண்டவர்.தமிழ் சினிமா பிரபலங்களை இவர் தாக்கிப் பேசிவந்த நிலையில் சமீபத்தில் பட்டியலின சமுதாய மக்களை காணொளி மூலம் கடுமையான வார்த்தைகளைக் கூறி திட்டினார்.இது பட்டியலின மக்களின் மனதை பெரிதும் புண்படுத்துவதாக இருந்தது.
இதனால் நடிகை மீரா மிதுன்மீது விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பல அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தன.இந்தப் புகாரையடுத்து காவல்துறை மீரா மிதுன்மீது ஏழு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.மேலும் காவல்துறை மீரா மிதுனுக்கு சம்மன் ஒன்றை அனுப்பினர்.அந்த சம்மனில் மீரா மிதுன் பட்டியலின மக்களை இழிவுப்படுத்தி பேசியதற்கு நேரில் ஆஜராகி அதற்க்கு விளக்கம் கொடுக்கவேண்டும் என்று காவல்துறை கூறியிருந்தனர்.ஆனால் மீரா மிதுன் காவல்நிலையத்திற்கு வரவில்லை.
மேலும் தான் காவல் நிலையத்திற்கு வர முடியாது எனவும் முடிந்தால் தன்னை கைது செய்து கொள்ளுங்கள் என்று காணொளி மூலம் காவல்துறைக்கு சவால் விடுத்தார் மீரா மிதுன்.அதனையடுத்து அவர் கேரளாவில் தன் நண்பரின் சொகுசு ஹோட்டல் ஒன்றில் யாருக்கும் தெரியாமல் தங்கி இருந்தார்.இந்த தகவலை தெரிந்து கொண்ட காவல்துறை கேரளாவிற்கு விரைந்து சென்று அவர் தங்கியிருந்த ஹோட்டலில் வைத்து மீரா மிதுனை கைது செய்தனர்.கைது செய்யும்போது ஒத்துழைப்பு தராமல் மீரா மிதுன் மீண்டும் காணொளி மூலம் கதறி அழுதுகொண்டே தனக்கு நியாயம் வேண்டும் என கூறினார்.
இறுதியாக மீரா மிதுனை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர் காவல்துறையினர்.இதனையடுத்து அவரது நண்பரையும் காவல்துறை கைது செய்தது.மீரா மிதுன் தனக்கு ஜாமீன் வேண்டும் என்று மனு ஒன்றை அவர் நீதிமன்றத்தில் கொடுத்துள்ளார்.அந்த மனுவில் அவர் தன்னை தவறாக பேசியவருக்கு பதிலடிக் கொடுப்பதற்கு வாய் தவறி பேசிவிட்டதாகவும் பல தயாரிப்பார்களுக்கு படம் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும்,அதனால் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரியும் அவர் தெரிவித்துள்ளார்.இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை இந்த மாதம் 23ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.