இன்று கொரோனா மெகா தடுப்பூசி முகாம்! ஒரே கிளிக்கில் இடத்தை தெரிந்து கொள்ள ஈசியான வழி

Photo of author

By Anand

இன்று கொரோனா மெகா தடுப்பூசி முகாம்! ஒரே கிளிக்கில் இடத்தை தெரிந்து கொள்ள ஈசியான வழி

Anand

Updated on:

இன்று கொரோனா மெகா தடுப்பூசி முகாம்! ஒரே கிளிக்கில் இடத்தை தெரிந்து கொள்ள ஈசியான வழி
நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள எடுத்து வருகின்றன.அந்த வகையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன.
இதனையடுத்து தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியானது தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதுவரை அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு பிறப்பிக்கபட்டிருப்ப்பதால் அந்நாளில் நடைபெற இருந்த இந்த தடுப்பூசி முகாம் சனிகிழமை நாட்களில் நடைபெறும் என அறிவிக்கபட்டிருந்தது.அந்த வகையில் சனிக்கிழமையான இன்று தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.
இதன் அடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் ஏறக்குறைய 1,600 இடங்களில் இந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் இந்த மெகா தடுப்பூசி முகாமில் 15 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் நடைபெறும் இந்த மெகா தடுப்பூசி முகாம்களின் இடங்கள் குறித்து https://chennaicorporation.gov.in/gcc/covid-details/mega_vac_det.jsp என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த இணைப்பில் சென்று Zone என்பதில் உங்களுக்கு அருகில் உள்ள பகுதியை தேர்வு செய்து முகாம் நடைபெறும் இடத்தை தெரிந்து கொள்ளலாம்.