29 ரன்களுக்கு சுருண்ட மெல்போர்ன்ஸ் ஸ்டார்ஸ் அணி!!! பெண்கள் பிக்பேஷ் லீக்கில் சிறப்பாக விளையாடிய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி!!!

0
166
#image_title

29 ரன்களுக்கு சுருண்ட மெல்போர்ன்ஸ் ஸ்டார்ஸ் அணி!!! பெண்கள் பிக்பேஷ் லீக்கில் சிறப்பாக விளையாடிய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி!!!

தற்பொழுது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான பெண்கள் பிக்பேஷ் லீக் தொடரில் நேற்று(அக்டோபர்21) நடைபெற்ற பெட்டியில் மெல்போர்ன் மகளிர் அணியை 29 ரன்களுக்கு சுருட்டி அடிலெய்ட் மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

நேற்று(அக்டோபர்21) நடைபெற்ற பெண்கள் பிக்பேஷ் லீக் தொடரில் அடிலேய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 20 ஓவர்களில் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் சேர்த்தது.

அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியில் அதிகபட்சமாக வீராங்கனை கேட்டி மேக் அவர்கள் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து 86 ரன்கள் சேர்த்தார். மற்றொரு வீராங்கனை வொல்வார்ட் 47 ரன்களும், டஹ்லியா மெக்கார்த் அவர்கள் 34 ரன்களும் சேர்த்தனர். மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் பந்துவீச்சில் சோபியே டே அவர்கள் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

இதையடுத்து 178 ரன்கள் இலக்காகக் கொண்டு களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு தொடக்கத்திலேயே அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி அதிர்ச்சியை கொடுத்தது. மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் தொடக்க வீராங்கனை மெக் லன்னிங் அவர்களை 1 ரன்னுக்கு ஆட்டமிழக்க செய்த மெல்போர்ன்ஸ் ஸ்டார்ஸ் அணி அடுத்தடுத்து அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு அதிர்ச்சியை கெடுத்துக் கொண்டே இருந்தது.

அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சால் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 18 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் 9.3 ஓவர்களின் முடிவில் 29 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது.

மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் அதிகபட்சமாக ஷோபியா டன்க்ளே அவர்கள் மட்டும் 9 ரன்கள் சேர்த்தார். மற்ற. வீராங்கனைகள் அனைவரும் ஒன்று இரண்டு ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியில் வீராங்கனைகள் மெகன் ஸ்ஹட், அமண்டா ஜடே வெல்லிங்டன் ஆகிய இருவரும் சிறப்பாக பந்து வீசி தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து வீராங்கனைகள் டஹ்லியா மெக்கர்த், அனெசு மஷன்ங்வெ ஆகிய இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனால் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி இந்த போட்டியில் 148 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறந்த வீராங்கனைக்கான விருதை அரைசதம் அடித்து 86 ரன்கள் சேர்த்த கேட்டி மேக் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

Previous articleஅவரை வைத்து என்னால் படம் இயக்க முடியாது!!! பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் அவர்கள் பேட்டி!!!
Next articleமலச்சிக்கல் குணப்படுத்தும் தக்காளி!!! இதன் மற்ற நன்மைகள் என்ன!!!