நாம் கடைபிடிக்கும் மோசமான உணவுப் பழக்க வழக்கங்களால் உடலில் கெட்ட கொழுப்பு தேங்கி உடல் பெருத்துவிடுகிறது.இந்த கொழுப்பை சிரமமின்றி கரைக்க கம்பு,வேர்க்கடலை உள்ளிட்ட பொருட்களை கொண்டு சுவையான லட்டு செய்து தினமும் சாப்பிடுங்கள்.
சிறுதானியமான கம்பு அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது.இந்த கம்பு உடல் சூட்டை தணிக்க உதவுகிறது.கம்பு லட்டு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.இந்த கம்பு லட்டு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)கம்பு – ஒரு கப்
2)வேர்க்கடலை – ஒரு கப்
3)வெள்ளை எள் – இரண்டு தேக்கரண்டி
4)தேங்காய் துருவல் – இரண்டு தேக்கரண்டி
5)வெல்லத் தூள் – தேவையான அளவு
6)ஏலக்காய் – ஒன்று
7)நெய் – சிறிதளவு
செய்முறை விளக்கம்:-
**முதலில் ஒரு கப் கம்பை தண்ணீரில் கொட்டி அலசி வெயிலில் பரப்பி காய வைத்துக் கொள்ள வேண்டும்.கம்பு நன்றாக காய்ந்து வந்ததும் இதை மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
**அடுத்து வேர்க்கடலை ஒரு கப் அளவிற்கு வாணலியில் போட்டு பொன்னிறமாக வரும் வரை வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
**அடுத்து இரண்டு தேக்கரண்டி வெள்ளை எள்ளை பொரியும் வரை வறுக்க வேண்டும்.அதன் பிறகு இரண்டு தேக்கரண்டி அளவு தேங்காய் துருவலை வாணலியில் போட்டு எண்ணெய் பிரியும் வரை பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
**இவை அனைத்தையும் ஆறவைத்து கம்பு உள்ள ஜாரில் கொட்டி பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
**பிறகு இதை பாத்திரத்தில் கொட்டி அரை கப் வெல்லத் தூள் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்ய வேண்டும்.அடுத்து ஒரு தேக்கரண்டி ஏலக்காய் தூள் மற்றும் சிறிதளவு பசு நெய் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.
**பிறகு இவற்றை நன்றாக மிக்ஸ் செய்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு டப்பாவில் வைத்து சேமிக்க வேண்டும்.இந்த உருண்டையை தினமும் ஒன்று என்ற எண்ணிக்கையில் சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்பு கரையும்.வெயில் காலத்தில் உடல் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள இந்த கம்பு லட்டு செய்து சாப்பிடலாம்.