Memory Power Increase Tips: தேங்காய் பாலில் இந்த பொருளை கலந்து குடித்தால் 100% புத்தி கூர்மை பெறலாம்!!
மூளை ஆரோக்கியமாக இருந்தால் தான் ஞாபக சக்தி அதிகமாகும்.சிலருக்கு ஊட்டச்சத்து குறைபாடு,வைட்டமின் குறைபாடு,மூளை நரம்பு பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் ஞாபக மறதி ஏற்படும்.எனவே மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க,ஞாபக சக்தி பெருக கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகளை தொடர்ந்து பின்பற்றி வரவும்.
தேவையான பொருட்கள்:-
1)தேங்காய்
2)பாதாம்
3)வால்நட்
செய்முறை:-
அரை மூடி தேங்காயை துருவி மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய அரைத்து வடிகட்டி கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு வாணலி வைத்து 5 பாதாம் மற்றும் 5 வால்நட் பருப்பு சேர்த்து ஒரு நிமிடம் மிதமான தீயில் வறுத்து பவுடர் செய்து கொள்ளவும்.
இந்த பவுடரை அரைத்த தேங்காய் பாலில் சேர்த்து குடித்து வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)தேங்காய் பால்
2)வல்லாரை பொடி
செய்முறை:-
ஒரு கப் தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி வல்லாரை பொடி சேர்த்து குடித்து வந்தால் புத்தி கூர்மை பெறும்.
தேவையான பொருட்கள்:-
1)தேங்காய் பால்
2)பெரிய நெல்லிக்காய்
3)தேன்
ஒரு கப் தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு நெல்லிக்காயின் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.இந்த சாற்றை தேங்காய் பாலில் ஊற்றி கலக்கவும்.பிறகு ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து குடித்து வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)தேங்காய் பால்
2)நீர் பிரம்மி பொடி
செய்முறை:-
ஒரு கப் தேங்காய் பாலில் ஒரு தேக்கரண்டி நீர் பிரம்மி பொடி சேர்த்து காலை நேரத்தில் குடித்து வந்தால் மூளை ஆரோக்கியம் மேம்படும்.அதேபோல் தேங்காய் பாலில் வசம்பு பொடி,நீர் பிரம்மி பொடி மற்றும் திப்பிலி பொடி சேர்த்து அருந்தி வந்தால் ஞாபக சக்தி பல மடங்கு அதிகரிக்கும்.