இறுக்கமான ஆடை அணியும் ஆண் பெண்.. இந்த விஷயத்தை பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

Photo of author

By Divya

இறுக்கமான ஆடை அணியும் ஆண் பெண்.. இந்த விஷயத்தை பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

Divya

மனிதர்களுக்கு உடை மானம் காக்கும் விஷயமாக உள்ளது.முன்பெல்லாம் ஆடை நாகரிகம் நன்றாக இருந்தது.ஆனால் தற்பொழுது ஆடை கலாச்சரம் என்ற பெயரில் நாகரிகமற்ற உடைகள் அணிவது வழக்கமாக மாறி வருகிறது.

தற்பொழுது இளம் தலைமுறையினர் இறுக்கமான உடைகள் அணிவதை விரும்புகின்றனர்.லெகின்,ஜெகின் போன்ற இறுக்கமான கீழாடையை பெரும்பாலான பெண்கள் அணிகின்றனர்.அதேபோல் ஆண்களும் இறுக்கமான ஆடைகள் அணிவது வழக்கமாகி வருகிறது.

இறுக்கமான ஆடை அனைவருக்கும் பொருத்தமாக இருக்காது.சிலருக்கு இவை அசௌகாரியத்தை ஏற்படுத்தலாம்.உடலை ஒட்டிய நிலையில் அணியும் ஆடைகள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

நீங்கள் நீண்ட நேரம் இறுக்கமான ஆடை அணிந்தீர்கள் என்றால் நிச்சயம் வயிறு அழுத்தம் ஏற்பட்டு வலி,செரிமானப் பிரச்சனை போன்றவை ஏற்படலாம்.

இறுக்கமான ஆடைகள் இரத்த ஓட்டத்தை பாதிக்கச் செய்யும்.உடலுடன் ஒட்டிய ஆடைகள் அணிந்தால் தோல் அரிப்பு,தோல் எரிச்சல் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.

ஆண்களுக்கு இறுக்கமான ஆடை ஆண்களின் விந்தணு உற்பத்தியை குறைக்கும்.பெண்கள் இறுக்கமான ஆடை அணிவதால் ஈஸ்ட் தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது.இறுக்கமான நைலான் துணிகளை அணிந்தால் தோல் சிவத்தல்,தோல் எரிச்சல்,பாக்டீரியா தொற்றுகள் ஏற்படலாம்.

நாம் இறுக்கமான ஆடைகளை அணிந்தால் வியர்வை வெளியேறாமல் உடலிலேயே தங்கி சருமப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.இறுக்கமான ஆடைகளால் தொற்று பாதிப்புகள் ஏற்படலாம்.இறுக்கமான ஆடைகள் தொடை,அக்குள் போன்ற பகுதிகளில் அதிக எரிச்சல் உணர்வை ஏற்படுத்தலாம்.

எனவே தளர்வான காட்டன் ஆடைகள் அணிவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.ஆடைகளை நன்றாக சுத்தம் செய்து பயன்படுத்துங்கள்.நைலான் ஆடைகள் அணிவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.