ஆண்கள் பலருக்கு தங்கள் உடல் அமைப்பு கட்டுக்கோப்பாக இருக்க வேண்டுமென்று ஆசை இருக்கும்.மார்பு,வயிற்றுப்பகுதியில் சதை தொங்காமல் கட்டுடலுடன் இருக்க கடுமையான டயட்,உடற்பயிற்சி போன்றவை அவசியமாகும்.ஆனால் பெரும்பாலனவர்கள் தவறான ஆனால் இன்று பெரும்பாலான ஆண்களின் உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகரித்து சதை தொங்குகிறது.
குறிப்பாக ஆண்களின் மார்பகங்களின் சதை அதிகரிப்பால் பிடித்த உடைகளை கூட அணிய முடியதா நிலை ஏற்படும்.ஆண்களின் உடல் கட்டமைப்பை அழகாக காட்டுவதில் மார்பு பகுதிக்கு முக்கிய பங்கு உண்டு.
ஆனால் அதிக கொழுப்பு படித்தல்,ஹார்மோன் மாற்றங்களால் மார்பு பகுதியில் சதை சேர்ந்து தொங்குகிறது.மார்பு பகுதியில் சேர்ந்த கொழுப்பை மட்டும் கரைப்பது எளிதற்ற விஷயம்.உடலில் தொங்கும் சதையை குறைக்க உணவுக் கட்டுப்பாட்டுடன் வாக்கிங்,ஜாக்கிங்,சைக்கிளிங்,உடற்பயிற்சி போன்றவை தேவைப்படுகிறது.
மார்பு சதைகளை குறைக்க உதவும் உடற்பயிற்சிகள்:
புஷ்-அப்
தினமும் புஷ்-அப் செய்வதால் மார்பு பகுதியில் உள்ள கொழுப்புகள் கரைந்து உடல் அமைப்பு இறுக்கமாகும்.
டம்பெல் ப்ளைஸ்
உங்கள் மார்பு சதையை குறைத்து மார்பின் அகலத்தை அதிகரிக்க டம்பெல் வைத்து பயிற்சி செய்யலாம்.
பெஞ்ச் பிரஸ்
மார்பு பகுதிக்கான சரியான வடிவத்தை கொடுக்கும் பயிற்சி இதுவாகும்.
டக் ஜம்ப்ஸ்
இது சற்று கடினமான உடற்பயிற்சி ஆகும்.நீங்கள் குதித்து கொண்டே உங்கள் முழங்காலை மார்பு பகுதியில் தொடுமாறு செய்ய வேண்டும்.தினமும் 20 டக் ஜம்ப்ஸ் செய்து வந்தால் 15% மார்பு சதைகள் கரைந்துவிடும்.