தமிழக அரசு தரப்பில் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் விதமாக ஆட்டோக்கள் தமிழகத்தில் சென்னையில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
2025 மார்ச் 8 ஆம் தேதி அன்று தமிழகம் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களால் துவங்கி வைக்கப்பட்ட திட்டத்தின் மூலம் பெண்கள் பயனடையாமல் மாற்றாக சில ஆண்கள் இந்த பிங்க் நிற ஆட்டோக்களை ஓட்டி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தமிழக அரசு தரப்பில் அவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. எனினும் அந்த எச்சரிக்கையை கண்டு கொள்ளாமல் பிங்க் நிற ஆட்டோக்களை ஊட்டிய ஆண்களை கைது செய்ததோடு அந்த ஆட்டோக்களையும் தமிழக அரசு பறிமுதல் செய்திருக்கிறது.
பெண்களின் உடைய வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகவும் குழந்தைகள் மற்றும் பெண்களின் உடைய பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையிலும் ஒரு லட்சம் ரூபாய் மானியத்துடன் வங்கி கடனுதவியையும் பெற்றுக் கொடுத்து இந்த பிங்க் நிற ஆட்டோக்கள் பெண்களுக்காக வழங்கப்பட்டது. ஆனால் இதனை பெண்கள் ஊட்டாமல் ஆண்களோட குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், சமூக நலத்துறை தரப்பில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த கள ஆய்வின் பொழுது 2 பிங்க் நிற ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.