ஆண்களே.. SPERM COUNT அதிகரிக்க இந்த ஒரு லட்டுவை தினமும் சாப்பிடுங்கள்!!

0
139
Men.. Eat this Laddu daily to increase your sperm count!!
Men.. Eat this Laddu daily to increase your sperm count!!

ஆண் மலட்டு தன்மை வராமல் இருக்க,விந்தணு குறைபாடு நீங்க ஆண்கள் அவசியம் கருப்பு உளுந்தை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.சிலர் கருப்பு உளுந்தை விரும்பி சாப்பிட மாட்டார்கள்.அவர்கள் எல்லாம் கருப்பு உளுந்துடன் பாதாம்,வேர்க்கடலை,முந்திரி உள்ளிட்ட பொருட்களை சேர்த்து லட்டு செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:

1)கருப்பு உளுந்து
2)நெய்
3)வேர்க்கடலை
4)முந்திரி பருப்பு
5)பாதாம் பருப்பு
6)நாட்டு சர்க்கரை

செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு கப் கருப்பு உளுந்தை பாத்திரத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி இரண்டு முதல் மூன்று முறை அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.

பிறகு அகலமான காட்டன் துணியில் இந்த கருப்பு உளுந்தை கொட்டி நாள் முழுவதும் வெயிலில் காய வைக்கவும்.

பின்னர் அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து காய வைத்த கருப்பு உளுந்தை போட்டு லேசாக வறுக்கவும்.உளுந்து வாசனை வரும் வரை வறுத்து ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.

பிறகு கடாயில் ஒரு தேக்கரண்டி பசு நெய் சேர்த்து சூடாக்கி 50 கிராம் பாதாம் பருப்பு,50 கிராம் முந்திரி பருப்பு,50 கிராம் வேர்க்கடலை சேர்த்து வாசனை வரும் வரை பொன்னிறமாக வறுக்கவும்.பிறகு இதை நன்கு ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் கொட்டவும்.

அடுத்து வறுத்து வைத்துள்ள கருப்பு உளுந்தை அதில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைக்கவும்.இதை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்துவிடவும்.

பிறகு கையில் நெய் தடவிக் கொண்டு லட்டு பிடிக்கவும்.இந்த உளுந்து லைட்டை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு சேமித்து வைக்கவும்.

தினமும் காலை மற்றும் இரவு என இருவேளை இந்த கருப்பு லட்டை சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.அதேபோல் பெண்கள் இந்த கருப்பு உளுந்து லட்டு சாப்பிடுவதால் மாதவிடாய் கோளாறு,இடுப்பு வலி,மூட்டு வலி,கை கால் வலி போன்ற பாதிப்புகள் சரியாகும்.

Previous articleஇளமை குறையாமல் இருக்க இந்த மூன்று பொருட்கள் அடங்கிய மேஜிக் க்ரீமை பயன்படுத்துங்கள்!!
Next articleஉடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க வெறும் 5 ரூபாய் செலவு செய்யுங்கள் போதும்!!