ஆண்களே இதையெல்லாம் செய்தால் ஆண் மலட்டுத்தன்மை வந்துவிடும்!! அதை கண்டுபிடிக்க எளிய வழி முறைகள் இதோ!!

Photo of author

By Divya

ஆண்களே இதையெல்லாம் செய்தால் ஆண் மலட்டுத்தன்மை வந்துவிடும்!! அதை கண்டுபிடிக்க எளிய வழி முறைகள் இதோ!!

இன்றைய வாழ்க்கை முறையில் பிறப்பு விகிதம் குறைந்த வண்ணம் உள்ளது.தம்பதியர் உடலுறுவு வைத்தும் ஓர் ஆண்டிற்குள் கருவுறாமல் போவதை மலட்டு தன்மை என்று அழைக்கின்றோம்.கருப்பையில் கருமுட்டை தங்காமல் போக பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் முக்கிய காரணமாக இருக்கின்றனர்.

பெண்களுக்கு கருப்பையில் பிரச்சனை இருத்தல்,தைராய்டு,நீர்க்கட்டி உள்ளிட்ட பிரச்சனைகளால் எளிதில் கருவுறமுடியாமல் போய்விடுகிறது.அதேபோல் ஆண்களுக்கு விந்து குறைபாடு,நீர்த்த விந்து வெளியேற்றம் உள்ளிட்ட காரணங்களால் மலட்டு தன்மை உண்டாகிறது.

நமது இந்தியாவில் சுமார் 2 கோடியே எழுபத்து ஐந்தாயிரம் மக்கள் மலட்டு தன்மையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்கிறது ஆய்வு முடிவுகள்.இதில் பெரும்பாலும் ஆண்களே இப்பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

ஆண்களுக்கு மலட்டு தன்மை ஏற்படக் காரணம்:

1)புகைபிடித்தல்
2)மது அருந்துதல்
3)உடல் பருமன்
4)ஹார்மோன் மாற்றம்
5)மன அழுத்தம்

மின்சாதங்களை பயன்படுத்தும் பொழுது அதில் இருந்து வெளியேறக் கூடிய கதிர்வீச்சுகள் விந்தணு உற்பத்தியை பாதிக்கிறது.ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை எடுத்துக் கொள்வது,மரபணு கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளால் விந்தணு குறைபாடு ஏற்படுகிறது.

மலட்டு தன்மையை கண்டறிய உதவும் சோதனைகள்:

1)விந்தணு நகர்வு,வடிவம் குறித்த பரிசோதனை

2)இரத்த பரிசோதனை மூலம் ஹார்மோன் எண்ணிக்கை கண்டறிதல்

3)மரபணு கோளாறு கண்டறிதல்.

4)விதைப்பையில் பிரச்சனை உள்ளதா என்பதை கண்டறிய பரிசோதனை

ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி குறைவாக இருக்கும் பட்சத்தில் ஏஆர்டி சிகிச்சை முறை மூலம் பெண்ணின் கருமுட்டையுடன் விந்தணுவை இணைத்து கருவை உருவாக்கலாம்.

இன்றைய காலத்தில் மருத்துவத்தில் பல்வேறு நவீன சிகிச்சைகள் வந்துவிட்டதால் குழந்தையின்மை பற்றி தம்பதியர் கவலை கொள்ளத் தேவையில்லை.