ஆண்களே இந்த தவறை செய்தால் கட்டாயம் விந்து எண்ணிக்கையில் பிரச்சனை வரும்!! எச்சரிக்கை!!

Photo of author

By Divya

ஆண்களே இந்த தவறை செய்தால் கட்டாயம் விந்து எண்ணிக்கையில் பிரச்சனை வரும்!! எச்சரிக்கை!!

உலக அளவில் ஆண்களிடம் விந்தணு எண்ணிக்கை மற்றும் அதன் தரம் குறைந்து வருகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.பெண்களுக்கு கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படுவது போல் ஆண்களுக்கு விந்தணு குறைபாடு,மலட்டு தன்மை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கு ஆண்கள் செய்யும் சில தவறுகளே காரணம் என்று ஆய்வுகள் சொல்கிறது.

ஆண்களின் விந்தணு தரமானதாக இருந்தால் மட்டுமே பெண்களுக்கு கருத்தரிப்பு எளிதில் நடக்கும்.ஆண்மை தொடர்பான பாதிப்புகள் தொடர்ந்தால் ஆண்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும்.தாம்பத்திய உறவில் தங்கள் துணியை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியாத நிலை உருவாகும்.

ஆண்களின் விந்தணுக்கள் குறைவதற்கான காரணங்கள்:

1)மோசமான உணவுப்பழக்கம்
2)மன அழுத்தம்
3)மது மற்றும் புகைப்பழம்
4)தூக்கமின்மை
5)உடல் உழைப்பு இல்லாமை
6)இறுகிய ஆடை அணிவது
7)அடிக்கடி சுய இன்பம் செய்வது
8)கடுமையான உடற்பயிற்சி

மனிதராக பிறந்த அனைவருக்கும் உடல் ஓய்வு முக்கியமாகும்.அதிக உடல் உழைப்பை வெளிப்படுத்தும் ஆண்கள் ஒரு நாளைக்கு குறைந்து 8 மணி நேரமாவது உறங்க வேண்டும்.ஆனால் இன்று பலர் தூங்குவதையே மறந்து விட்டனர்.இதனால் உடல் ஆரோக்கியம் மோசமடைகிறது.குறிப்பாக விந்தணு குறைபாடு ஏற்படுவது அதிகரிக்கிறது.

அதேபோல் எடுத்துக் கொள்ளும் உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.சில உணவுகள் விந்தணு தரத்தை கூடியவையாக இருக்கும்.எனவே உணவுமுறையில் அதிக அக்கறை செலுத்துவது அவசியமாகும்.

மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.அடிக்கடி சுய இன்பம் செய்தல் விந்தணுக்களின் தரத்தை குறைத்துவிடும்.

அதேபோல் இறுக்கமான ஜீன்ஸ்,உள்ளாடைகள் அணிவதை தவிர்க்கவும்.இறுக்கமான உள்ளாடைகளால் ஆண் உறுப்பு பாதிக்கப்படுவதோடு,விந்தணு எண்ணிக்கையும் குறைந்துவிடும்.எனவே ஆண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துவது அவசியமாகும்.