News

விந்தணுக்களின் தரம் அதிகரிக்க ஆண்கள் கட்டாயம் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!!

Photo of author

By Rupa

இன்று குழந்தையின்மை பிரச்சனையை பலரும் சந்தித்து வருகின்றனர்.இது ஒரு பெரிய குறைபாடாகவே பார்க்கப்படுகிறது.முன்பெல்லாம் கருவுறுதல் தாமதமானால் பெண் தான் காரணம் என்று கருதினார்கள்.ஆனல் இன்று கருவுறாமைக்கு ஆண்களும் காரணம் என்ற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட்டு வருகிறது.

பெண்ணின் கருப்பையில் பிரச்சனை இருந்தால் கருவுறுதல் தாமதமாகும்.அதேபோல் தான் ஆண்களுக்கு விந்தணு குறைபாடு இருந்தால் கருவுறுதலில் தாமதம் ஏற்படும்.ஆண்களின் விந்தணு தரமானதாகவும் வீரியமிக்கதாவாகவும் இருக்க வேண்டும்.

ஆண்கள் தங்கள் விந்தணுக்களை அதிகரிக்க சில உணவுகளை அவசியம் உட்கொள்ள வேண்டும்.அதன்படி கீழே விவரிக்கப்பட்டுள்ள உணவுகளை தவறாமல் எடுத்துக் கொண்டால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகமாவதோடு உடலும் வலிமையாக இருக்கும்.

முட்டை

அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய முட்டை ஆண்களின் விந்தணு இயக்கத்திற்கு பெரிதும் உதவுகிறது.இதில் இருக்கின்ற’வைட்டமின் ஈ விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.

வாழைப்பழம்

ஆண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய பழங்களில் ஒன்று வாழை.இதில் வைட்டமின் பி1 மற்றும் சி உள்ளது.அதேபோல் மெக்னீசியம் சத்துக்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது.இந்த வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.

பூண்டு

இதில் அலிசின் என்ற வேதிப்பொருள் இருக்கின்றது.இந்த அலிசின் விந்து உற்பத்தியை மேம்படுத்த உதவுகிறது.அது மட்டும் இன்றி பாலியல் உறுப்புகளை சீராக இயங்க உதவுகிறது.

பூசணி விதை

இதில் கால்சியம்,இரும்பு,நார்ச்சத்து உள்ளிட்டவை அதிகளவு நிறைந்திருக்கிறது.இந்த பூசணி விதையை வறுத்து பாலில் கலந்து குடித்தால் தரமான விந்தணு உற்பத்தியாகும்.

உலர் பருப்பு மற்றும் உலர் பழங்கள்

தினமும் பாதாம்,உலர் திராட்சை,முந்திரி,பிஸ்தா,பேரிச்சை போன்ற உலர் பழங்கள் மற்றும் விதைகளை பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்.

கனவில் குழந்தைகள் வருகிறார்களா? அப்போ இந்த பலன்கள் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்!!

கடுமையான சளி காய்ச்சலுக்கு சிறந்த வீட்டு வைத்தியம்!! ஒரு மணி நேரத்தில் தீர்வு கிடைக்கும்!! உடனே ட்ரை பண்ணி பாருங்கள்!!