ஆண்களே நோட் பண்ணுங்க!! விந்தணு தரம் இப்படி இருந்தால் தான் குழந்தை பிறக்குமாம்!!

Photo of author

By Divya

ஆண்களே நோட் பண்ணுங்க!! விந்தணு தரம் இப்படி இருந்தால் தான் குழந்தை பிறக்குமாம்!!

Divya

இந்தியாவில் குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வரும் பெரும் பிரச்சனையாக இருக்கிறது.இது தவிர இன்றைய இளம் தலைமுறையினர் குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பது ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது.திருமணம் ஆனவுடன் குழந்தை பெற்றுக் கொண்டால் கல்யாண வாழ்க்கையை என்ஜாய் பண்ண முடியாது என்பது பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.

அதேபோல் பொருளாதார சூழலும் குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வத்தை குறைக்கிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்சிலருக்கு உடல் நலப் பிரச்சனையால் குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுகிறது.பெரும்பாலும் ஆண்மை குறைபாடு அல்லது பெண்களுக்கு கருப்பை பிரச்சனை,தைராய்டு போன்ற பாதிப்புகளால் தான் குழந்தை பெற்றுக் கொள்ள தாமதமாகிறது என்கின்றனர்.

நாம் நாட்டில் உள்ள ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி குறைவாக இருப்பதாக ஆய்வுகள் சொல்கிறது.தரமற்ற விந்து காரணமாக குழந்தையின்மை பிரச்சனையை அவர்கள் சந்திக்கின்றனர்.கடந்த காலங்களில் குழந்தையின்மை பிரச்சனை என்பது மிகவும் குறைவாக இருந்தது.ஆனால் சமீப காலமாக குழந்தையின்மை பிரச்சனை தலைவிரித்தாடுகிறது.

பெண்கள் பலர் தைராய்டு,சினைப்பை நீர்க்கட்டி,கருப்பை சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருவதால் அவர்களால் எளிதில் கருவுற முடியாத சூழல் ஏற்படுகிறது.அதேபோல் ஆண்களுக்கு விந்தணு குறைபாடு,தரமற்ற விந்து,விறைப்புத் தன்மையின்மை,உடலுறவில் நாட்டம் இல்லாமை போன்ற காரணங்களால் தங்கள் துணையை கருத்தரிக்க வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

திருமணமாகி நீண்ட வருடங்களாகியும் குழந்தையின்மை பிரச்சனையை சந்தித்து வரும் தம்பதிகள் தயக்கம் இன்றி சம்மந்தபட்ட மருத்துவரை அணுகி தங்கள் பிரச்சனையை விவரிக்க வேண்டியது முக்கியம்.அனைவராலும் இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்.ஆண்களுக்கு விந்தணு குறைபாடு இருந்தால் அதை சரி செய்ய தற்பொழுது பல நவீன சிகிச்சைகள் வந்துவிட்டது.அதேபோல் விந்து உற்பத்தியை அதிகரிக்கும் ஆலோசனையை மருத்துவர்கள் வழங்குகின்றனர்.பாலியல் சார்ந்த சந்தேகங்களை தெளிவாக விளக்குகின்றனர்.எனவே உங்களுக்கு உடல் நலப் பிரச்சனை இருக்கிறது என்ற சந்தேகம் இருந்தால் நீங்கள் தம்பதியாக மருத்துவரை அணுக வேண்டியது முக்கியம்.மருத்துவர் கூறும் ஆலோசனைகளை பின்பற்றினால் உங்களாலும் இயற்கையான முறையில் சீக்கிரம் கருத்தரிக்க முடியும்.