ஆண்களே உங்கள் மெலிந்த உடலின் எடையை அதிகரிக்க.. தினமும் இரவில் இதை மறக்காமல் செய்யுங்கள்!!

Photo of author

By Divya

தற்பொழுது உள்ள காலகட்டத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் மட்டுமே நோய் பாதிப்புகளில் தங்களை காத்துக் கொள்ள முடியும்.ஆரோக்கியமாக வாழ தேவையான ஒன்று உணவு.

நமது தாத்தா பாட்டி காலத்தில் கம்பு,ராகி போன்ற சிறு தானிய உணவுகள் அதிகம் உட்கொள்ளப் பட்டதால் உடம்பு கட்டுக்கோப்பாக இருந்தது.ஆனால் தற்பொழுது வீட்டில் சமைத்த உணவுகளை தவிர்த்துவிட்டு ஹோட்டலில் விற்கப்படும் ஆரோக்கியமில்லாத உணவுகளை விரும்பி உண்பதால் உடல் ஆரோக்கியம் பாதிப்படைகிறது.

இப்பொழுது உள்ள தலைமுறையினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாகவே இருக்கிறது.இதனால் நோய் பாதிப்புகள் எளிதில் தாக்கிவிடுகிறது.ஆண்களுக்கு உடல் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டியது அவசியம்.

ஆனால் சிலர் உடல் பருமன் பிரச்சனையை சந்தித்து வருவார்கள்.சிலர் என்ன சாப்பிட்டாலும் சதை கூடாமல் உடல் மெலிந்து காணப்படுவார்கள்.உடல் எடையை அதிகரிக்க முடியாமல் திணறுபவர்கள் தினமும் இரவு நேரத்தில் பாலில் வாழைப்பழம் சேர்த்து சாப்பிடுங்கள்.

வாழைப்பழத்தில் பொட்டாசியம்,இரும்பு,வைட்டமின்கள்,மெக்னீசியம்,போலிக் அமிலம் அமிலம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.அதேபோல் பாலில் கால்சியம்,புரதம்,பாஸ்பரஸ்,மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கிறது.

காய்ச்சிய பசும் பாலில் வாழைப்பழத்தை சேர்த்து பருகினால் உடலில் ஆற்றல் அதிகரிக்கும்.வாழைப்பழ பால் உடலில் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.இரவு நேரத்தில் வாழைப்பழம் கலந்த பால் பருகினால் நல்ல தூக்கம் கிடைக்கும்.உடல் எடை மெலிந்து காணப்படுபவர்கள் வாழைப்பழ பால் குடித்து வந்தால் ஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகரிக்கும்.இந்த பாலை தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.