தற்போதைய வாழ்க்கை முறையில் ஆரோக்கியம் இல்லாத உணவுப் பழக்கத்தால் பருவமடைந்த பெண்கள் பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்கின்றனர்.சீரற்ற மாதவிடாய்,நீர்க்கட்டி,மாதவிடாய் வயிற்று வலி,கருப்பை சார்ந்த பாதிப்புகளை சந்திக்கும் பெண்கள் உடல் மற்றும் மனதளவில் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
மாதவிடாய் கோளாறு அறிகுறிகள்:
1)கடுமையான இரத்தப் போக்கு
2)வயிற்று வலி
3)இரத்த சோகை
4)தசை பிடிப்பு
5)கடுமையான இடுப்பு வலி
தற்பொழுது பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் பெருமளவு மாற்றம் ஏற்படுகிறது.சில பெண்கள் இரண்டு மூன்று மாதங்களுக்கு பிறகு மாதவிடாய் சுழற்சியை சந்திக்கின்றனர்.
மாதவிடாய் தள்ளிப்போக காரணங்கள்:
1)உணவுப்பழக்கம்
2)ஹார்மோன் ஏற்றத்தாழ்வு
3)ஊட்டச்சத்து குறைபாடு
4)PCOS / PCOD பிரச்சனை
5)தைராய்டு
6)உடல் பருமன்
7)மன அழுத்தம்
முறையற்ற மாதவிடாய் சுழற்சியை சந்திக்கும் பெண்களால் எளிதில் கருவுற முடியாது.எனவே மாதவிடாய் சுழற்சி சரியாக நடக்கவும்,நீர்க்கட்டி பாதிப்பு குணமாகவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை செய்யவும்.
*கழற்சிக்காய் பானம்
நாட்டு மருந்து கடையில் கழற்சிக்காய் கிடைக்கும்.இதை வாங்கி வந்து இடித்து ஒரு கப் நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவைக்கவும்.மறுநாள் காலையில் இந்த பானத்தை பருக வேண்டும்.இந்த கழற்சிக்காய் பானத்தை தொடர்ந்து பருகி வந்தால் மாதவிடாய் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.
*ஓமம்
ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி ஓமம் சேர்த்து கொதிக்க வைத்து வடித்து குடித்தால் மாதவிடாய் கோளாறு சரியாகும்.
*எள்
மாதவிடாய் சுழற்சி சரியாக இருக்க எள் கொண்டு தயாரிக்கப்பட்ட பானத்தை பருகலாம்.ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி கருப்பு எள் போட்டு கொதிக்க வைத்து வடித்து குடித்து வந்தால் மாதவிடாய் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும்.
*கொத்தமல்லி விதை
ஒரு கிளாஸ் தண்ணீரில் அரை தேக்கரண்டி அளவு கொத்தமல்லி விதை போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் மாதவிடாய் கோளாறு,தைராய்டு பிரச்சனை,நீர்க்கட்டி போன்ற பாதிப்புகள் குணமாகும்.