பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலி! இதை குறைக்க உதவும் ஹெர்பல் டீ வகைகள் !!

0
130
#image_title
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலி! இதை குறைக்க உதவும் ஹெர்பல் டீ வகைகள்
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலியை குறைக்க மூன்று வகையான ஹெர்பல் டீ எவ்வாறு தயார் செய்து குடிப்பது என்பதை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள்.
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலியை குறைக்க உதவும் டீ வகைகள்…
* இலவங்கப்பட்டை டீ
* ஓமம் டீ
* ரெட் ராஸ்பெரி டீ
இலவங்கப்பட்டை டீ…
இலவங்கப்பட்டையில் காரத்தன்மை அதிகம் இருப்பதால் இது பல நற்குணங்களை கொண்டுள்ளது. இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் பொழுது பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. மேலும் இதை பயன்படுத்தி டீ தயார் செய்து குடிக்கும் பொழுது பொறுத்துக் கொள்ள முடியாத வலியையும் குறைக்க உதவும்.
இலவங்கப்பட்டை டீ தயார் செய்யும் முறை…
அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரம் வைத்து தேவைப்படும் தண்ணீர் சேர்த்து சூடு செய்து கொள்ள வேண்டும். பின்னர் இதில் இலவங்கப்பட்டை பொடியை சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் இதில் சிறிதளவு இஞ்சியை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம். இவ்வாறு குடிக்கும் பொழுது மாதவிடாய் வலி குறைகின்றது.
ரெட் ராஸ்பெரி டீ…
மாதவிடாய் வலியை குறைக்க பெண்கள் ரெட் ராஸ்பெரி டீ வைத்து குடிக்கலாம். அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதில் ரெட் ராஸ்பெரி இலைகளை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அதிக நேரம் வேண்டாம். 10 முதல் 15 நிமிடங்கள் கொதிக்க வைத்தால் போதும். பின்னர் இதை வடிகட்டி குடித்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலியை குறைக்கும்.
ஓமம் டீ…
ஓமத்தில் பிளேவனாய்டுகள், பாலி ஃபீனால்கள், மினரல்கள், இயற்கையான ஆயில் ஆகிய சத்துக்கள் இருப்பதால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலியை வேகமாக குறைக்க உதவும்.
அடுப்பை பற்ற வைத்து அதில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதில் ஓம இலைகளை சேர்த்து 10 முதல் 15 நிமிடம் மூடி போட்டு வைக்க வேண்டும். பின்னர் இதை இறக்கி வடிகட்டி குடிக்கலாம்.
Previous articleஅப்பா மகன்களாக நடித்த நிஜ வாழ்க்கை அப்பா மகன்கள்!
Next articleநீங்கள் கொடுத்து ஏமாந்த பணம் திரும்ப கிடைக்க வேண்டுமா?? அப்போ இந்த பரிகாரத்தை செய்து பாருங்க!!