பெண்கள் சிலர் மாதவிடாய் வலியை அதிகளவு சந்திக்கின்றனர்.அதிக இரத்தப் போக்கு,ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் மாதவிடாய் காலத்தில் வலி ஏற்படுகிறது.மாதவிடாய் வலி குறைய தொட்டால் சிணுங்கி பானத்தை பருகி வந்தால் பலன் கிடைக்கும்.
பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்திற்கு முன்பு இந்த தொட்டால் சிணுங்கி பானத்தை பருக வேண்டும்.இதற்கு தேவைப்படும் பொருட்கள் மற்றும் செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டள்ளது.
தேவையான பொருட்கள்:-
1)தொட்டால் சிணுங்கி – இரண்டு தேக்கரண்டி
2)சின்ன வெங்காயம் – ஐந்து
3)சீரகம் – கால் தேக்கரண்டி
4)மோர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
1.முதலில் தொட்டால் சிணுங்கி இலையை தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
2.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து ஐந்து சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
3.அடுத்து அடுப்பில் வாணலி வைத்து கால் தேக்கரண்டி நெய் சேர்த்து சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் சீரகம் சேர்த்து பொரியவிட வேண்டும்.
4.பிறகு நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை அதில் போட்டு வதக்க வேண்டும்.அடுத்து தொட்டால் சிணுங்கி கீரையை அதில் போட்டு வதக்க வேண்டும்.சின்ன வெங்காயம்,தொட்டால் சிணுங்கி கீரையின் பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கி எடுங்கள்.
5.பிறகு ஒரு கிளாசில் பசு மோர் ஊற்றி வதக்கி வைத்துள்ள தொட்டால் சிணுங்கி கலவையை அதில் கொட்டி கலந்து பருகினால் மாதவிடாய் வலி குறையும்.
6.மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு இருந்தால் இந்த தொட்டால் சிணுங்கி மோரை பருகினால் பலன் கிடைக்கும்.
7.தொட்டால் சிணுங்கி கலந்த மோர் பருகி வந்தால் நீரிழவு நோய் பாதிப்பு குணமாகும்.உடலில் வலி,வீக்கம் இருந்தால் தொட்டால் சிணுங்கி சாறை பருகினால் பலன் கிடைக்கும்.
8.தொட்டால் சிணுங்கியை கொண்டு தேநீர் செய்து பருகி வந்தால் செரிமானப் பிரச்சனை சரியாகும்.