வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு!
தமிழகத்தில் பெய்து வந்த பருவமழை ஓய்ந்ததில் இருந்து கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில், மழையின் அளவு எங்கும் அவ்வளவு பெரிதாக பதிவாகவில்லை. இந்த சூழ்நிலையில், காலை நேரத்தில் தமிழகத்தை பொறுத்தவரை கடும் குளிர் நிலவி வருகிறது.
இன்று முதல் ஐந்து நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்த முறை வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாகவே பெய்தது. வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தின் இறுதியில் முடிவுக்கு வந்திருந்தாலும், காலை நேரத்தில் பனிமூட்டம் நிலவி வருகிறது.
அந்த வகையில் கொடைக்கானலில், நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்திருந்தாலும் இரவு நேரத்தில் வெப்ப நிலை 11 டிகிரி செல்சியஸ் வரை குறைந்து காணப்பட்டது. இதனால் மலைப்பகுதி முழுவதும் கடும் குளிர் நிலவி காணப்பட்டது.
இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றிலிருந்து ஐந்து நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரத்தில் லேசான பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கும் என தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மழை எங்கும் பதிவாகவில்லை என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் தற்போதைய நிலவரத்தை பொறுத்தவரை மீனவர்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் விடுக்கவில்லை.