இன்று இந்த 25 மாவட்டங்களில் கனமழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

0
246

தென்மேற்கு வங்க கடலில் இலங்கையை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஆகவே வரும் 13ஆம் தேதி வரையிலும் தமிழ்நாடு முழுவதும் கனமழை தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் ஒரு சில பகுதிகளில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புண்டு.

தஞ்சை, நீலகிரி, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இன்று பிற்பகல் வரையிலும் மிக கனமழை பெய்ததற்கான வாய்ப்புள்ளது.

கோயம்புத்தூர், திருப்பூர், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், தேனி, மதுரை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தென்காசி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இருக்கின்ற மாவட்டங்களில் நாளை முதல் 3 தினங்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது. காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக சோளிங்கர், பூதலூரில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் 3 cm மழை பதிவாகியிருக்கிறது. என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றைய தினம் நள்ளிரவு வைக்க தொடங்கிய மழை நகரத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் சுற்றுவட்டார பகுதிகளிலும் விடிய, விடிய கொட்டி தீர்த்தது. இந்த மழை அதிகாலை வரை நீடித்தது. ஆகவே சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

Previous article“அவ்ளோ கஷ்டமா இருந்தா ஐபிஎல் விளையாடாதீங்க… “ கபில் தேவ் பரபரப்பு கருத்து
Next articleஸ்ரேயாஸ், இஷான் கிஷன் அபார பேட்டிங்… எளிதாக இலக்க்கை அடைந்த இந்தியா!