“அவ்ளோ கஷ்டமா இருந்தா ஐபிஎல் விளையாடாதீங்க… “ கபில் தேவ் பரபரப்பு கருத்து

0
56

“அவ்ளோ கஷ்டமா இருந்தா ஐபிஎல் விளையாடாதீங்க… “ கபில் தேவ் பரபரப்பு கருத்து

ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து இந்திய அனியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பேசியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று உலக கிரிக்கெட்டின் பணமழைக் கொட்டும் தொடராக  ஐபிஎல் உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் ஆரம்பிப்பதற்கு மூலக் காரணங்களில் ஒருவராக இருந்தவர் லலித் மோடி. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் மோசடிகள் செய்ததாக அவர் மேல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து லண்டனுக்கு சென்ற அவர் அங்கேயே வசித்து வருகிறார். இப்போது பிசிசிஐ கட்டுப்பாட்டில் ஏகபோக லாபத்துடன் ஆண்டாண்டு நடந்து வருகிறது ஐபிஎல் தொடர்.

இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடப்பது போல ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் தங்களுக்கான தொடர்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அவை ஐபிஎல் போல பிரபலமாகவோ அல்லது பணமழை கொட்டும் தொடர்களாகவோ இல்லை. இநிலையில் இதுபோன்ற தொடர்களில் விளையாடுவதால் வீரர்கள் அதிகளவில் மன அழுத்தத்தை உணர்வதாக விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.

இதுபற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னா கேப்டன் கபில்தேவ் “ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள மீது அதிக அழுத்தம் இருப்பதாக நான் நிறைய முறை கேள்விப்படுகிறேன். நான் ஒன்று மட்டும் சொல்கிறேன், அவ்வளவு அழுத்தம் இருந்தால் விளையாட வேண்டாம்,” என்று கூறியுள்ளார்.

மேலும் “ஒரு வீரருக்கு ஆர்வம் இருந்தால், எந்த அழுத்தமும் இருக்காது. மனச்சோர்வு போன்ற இந்த அமெரிக்க சொற்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் ஒரு விவசாயி, நாங்கள் விளையாட்டை ரசிப்பதால் விளையாடுகிறோம், மேலும் ரசிக்கும்போது எந்த அழுத்தமும் இருக்க முடியாது. விளையாட்டு,” கூறியுள்ளார்.