ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!! நாளையும் மழை தொடரும்!!
நாடு முழுவதும் பரவலாக மழை பெய்ந்து வரும் நிலையில், தற்போது மகாராஷ்டிரா மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது. அதிலும், குறிப்பாக மும்பை, தானே, ராய்காட், பாலகர், ரத்தினகிரி முதலிய பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
இதனால் மும்பை உட்பட பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்துள்ளது.
இதனால் மும்பை பகுதிகளில் மட்டுமல்லாமல், மற்ற நகர்களிலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கையை பால்கர் மாவட்டத்திற்கு அறிவித்துள்ளது.
மீதமுள்ள பகுதிகளுக்கு தானே, ராய்காட், ரத்தினகிரி போன்ற பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்று வரை கனமழை குறையாததன் காரணத்தால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியே வருமாறு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, புனே, கொங்கன், மத்திய மகாராஷ்டிராவின் அனைத்து பகுதிகளிலும் இன்று கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
மேலும், மும்பை உட்பட மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் நாளையும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தை ஒட்டி இருக்கக்கூடிய தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேச மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கான மாநிலத்தில் கனமழையால் இன்று கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு, தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதித்துள்ளது.
மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டிருக்கக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தான் தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது என்று இந்திய வானிலை மையம் கூறி உள்ளது.
மேலும், ஹைதராபாத் பகுதியிலும் கனமழையின் காரணமாக நகரின் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் மழை தொடரும் என்று தகவல் கிடைத்திருக்கிறது.