நாளை முதல் தொடங்குகிறது மெட்ரோ ரயில்கள் சேவை !!

Photo of author

By Parthipan K

நாளை முதல் தொடங்குகிறது மெட்ரோ ரயில்கள் சேவை !!

சென்னையில் நாளை முதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

பொதுப் போக்குவரத்து இல்லாமல் மக்கள் கஷ்டப்பட்டு வந்த நிலையில் ,புறநகர் ரயில் தவிர்த்து மற்ற அனைத்து சேவைகளும் இயங்கும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி நாளை முதல் மெட்ரோ சேவையும் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவை தொடங்கும் என அரசு தெரிவித்தது. இதனை தொடர்ந்து மெட்ரோ ரயில் சேவையானது நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் என முன்பே தெரிவிக்கப்பட்ட நிலையில், தொழிலாளர்களின் நிலை கருதி காலை 7 மணி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்தது.

மெட்ரோ ரயில் இயக்குவதில் சில புதிய வரைவுகள் மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது. மெட்ரோவில் பணமில்லா பரிவர்த்தனைகளில் ஸ்மார்ட் கார்ட் மற்றும் சிபியு பார் கோட் மூலம் டிக்கெட் பெறும் வசதி, பாதுகாப்பை உறுதி செய்ய காட்டு செல்லும் பாதையில் புற ஊதாக் கதிர்கள் மூலம் கிருமி நாசினி தெளித்து மற்றும் 24 முதல் 30 டிகிரி வெப்பநிலை மெட்ரோ ரயில்களில் பராமரிப்பு உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் நிலையத்திற்கு வரும் பயனாளிகள் தனிநபர் இடைவெளி பின்பற்றுவதற்கான எற்பாடு செய்யப்படிருப்பாக ரயில் நிர்வாகம் கூறியுள்ளது.

நாளை முதல் வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்னை நிலையம் விமான நிலையம் வரையுள்ள நீலநிற வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் 9- ஆம் தேதி முதல் சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் வரை இருக்கும் பச்சை நிற வழித்தடங்களில் ரயில் இயக்கப்படும் என்றும் கூறியுள்ளது. அலுவலக நேரத்தில் 5 மணி நேரத்துக்கு ஒரு ரயில்களும்,மற்ற நேரத்தில் பத்து நிமிடத்தில் ஒரு ரயிலும், ஒவ்வொரு நிலையத்திலும் 20 நொடிகள் பதிலாக 50 நொடிகளில் நின்று செல்லும் என்றும் ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.