கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த மூன்று நாக்களாக நீரின் அளவு அதிகரித்து வருகிறது.
மேட்டூர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து மூன்று நாட்களாக அதிகரித்து வருகிறது . இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.50 அடியாக அதிகரித்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறுகின்றனர் .
நேற்று காலை நிலவரப்படி நீரின் அளவு வினாடிக்கு 22,969 கன அடிவிகிதம் நீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று (11.10.2020) காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 24,036 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று காலை நிலவரப்படி 98.03 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை நிலவரப்படி 98.50 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக 16,000 கனஅடி தண்ணீரையும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் அணையின் நீர் இருப்பு 62.91 டிஎம்சி ஆக உள்ளது.