ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் எம்ஜிஆர் மகன்‌.!! படக்குழு அறிவிப்பு.!!

Photo of author

By Vijay

ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் எம்ஜிஆர் மகன்‌.!! படக்குழு அறிவிப்பு.!!

Vijay

சசி குமார் நடித்துள்ள எம்ஜிஆர் மகன் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடித்துள்ள திரைப்படம் எம்ஜிஆர் மகன். இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மிர்னாளினி ரவி நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சத்தியராஜ், சமுத்திரக்கனி உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர்.

இந்தப் படம் கடந்த ஆண்டு வெளியாகவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வெளியாகவில்லை. இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 4ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

அந்த வகையில், வரும் தீபாவளியன்று நவம்பர் 4-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளதாக இந்த படத்தின் இயக்குனர் பொன்ராம் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

சமீபத்தில் தான், நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான உடன்பிறப்பே திரைப்படம் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.