தேசிய விருதுக்கு பெயர்போனவரின் இயக்கத்தில் நடித்த எம்ஜிஆர்! படம் வெற்றி அடைந்ததா? எந்த படம்?

Photo of author

By Kowsalya

ஏழு தேசிய விருதுகளை வென்ற இயக்குனர் சுப்பாராவ் இயக்கத்தில் எம்ஜிஆர் நடித்துள்ளார் அந்த படம் என்னவென்று தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம்.

 

அதுர்த்தி சுப்பா ராவ், இவர் மிகவும் சிறந்த இயக்குனர். மேலும் ஒளிப்பதிவாளர் இவரது இயக்கத்தில் வரும் திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாகவே அமைந்து வந்தது. தெலுங்கு தமிழ் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் தனக்கென ஒரு இடத்தை படைத்து நல்ல படங்களை இயக்கி வந்தவர்.

 

இவர் இயக்கிய ஆறு தெலுங்கு திரைப்படங்கள் தேசிய விருதுகளை பெற்றுள்ளது. மேலும் தமிழில் ஒன்று மொத்தம் ஏழு தேசிய விருதுகளை இவர் இயக்கிய படம் வென்றுள்ளது. தமிழில் எந்த படம் என்று தானே நினைக்கிறீர்கள் குமுதம்.

 

ஆரம்பம் முதலில் கல்பனா என்ற இந்தி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் சுப்பாராவ். அதன் பிறகு அமர சந்தோஷம் என்ற ஒரு படத்தில் இயக்குனராக அறிமுகமானார். பிறகு எங்கள் வீட்டு மகாலட்சுமி என்ற படத்தை இயக்கி அதை தெலுங்கிலும் எடுத்தார். அதனால் இரண்டு மொழிகளில் படங்களை எடுப்பதை வழக்கமாகி கொண்டு இருந்தார். எங்கள் வீட்டு மகாலட்சுமி பாட்டாளியின் வெற்றி குமுதம் ஆகிய திரைப்படங்களை அவர் எடுத்தார்.

 

1964 இல் வெளிவந்தது தான் தாயின் மடி எம்ஜிஆர் அவர்கள் நடித்துள்ளார். தாய் பாசத்தை அப்படியே கொட்டி இருப்பார் இயக்குனர் சுப்பாராவ். இந்த படத்திற்கு வாலி மற்றும் கண்ணதாசன் பாடல்களை எழுதினர். இதில் வாலி எழுதிய தாயின் பாடல் ஒன்று அமைந்திருந்தது.

 

இப்படத்தில் எம்ஜிஆர் ஒரு புகழ்பெற்ற ஜாக்கியாக இருந்தார். பணத்திற்கு குறைவில்லை. ஆனால் இவர் ஒரு அனாதை. தாய் யாரென்று தெரியாமல் தேடிக் கொண்டிருந்தார். தேடிக் கொண்டிருந்த நிலையில் பணக்கார வீட்டுப் பெண்ணான சரோஜாதேவியுடன் காதல் ஏற்படுகிறது.

 

ஒரு சந்தர்ப்பத்தில் அவருக்கு தன் தாயின் சம்பந்தமான ஒரு துண்டு சீட்டு கிடைக்கின்றது. அந்த துண்டு சீட்டின் மூலம் தாய் இறந்து விடுகிறார் என்று நம்பி விடுகிறார் எம்ஜிஆர்.

 

காயங்களால் மிகவும் காயமடைந்த முகம் மற்றும் விகாரமான முகம் கொண்ட பண்டரிபாய் அவர்களுக்கு உதவி செய்கிறார் எம்ஜிஆர். பண்டரி பாய்தான் எம்ஜிஆரின் உண்மையான தாய். ஒரு கட்டத்தில் எம்ஜிஆர் தான் தனது மகன் என்ற உண்மை பண்டரி பாய்க்கு தெரிய வருகிறது. ஆனால் அந்த உண்மையை தனது மகனுக்கு சொல்ல முடியாது சூழல் ஏற்படுகிறது. பண்டரி பாய் நிலைமைக்கு யார் காரணம்? அவரை எப்படி பழி வாங்கினார் என்பதுதான் கதை.

 

தாய் பாசத்தை கதை வசனங்கள் மூலம் தனது இயக்கத்தின் மூலம் அப்படி பிளந்தெடுத்து இருப்பார் இயக்குனர் சுப்பாராவ்

 

 

ஆனால் எம்ஜிஆர் நடித்த இந்த தாயின் மடியின் படம் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. கமர்சியல் கலவை மக்களுக்கு பிடிக்கவில்லையோ என்னவோ அந்த படம் ஓடவில்லை.

 

இந்தக் கதை எதற்கு என்றால் தாயின் மடி படம் வெளியாகி டிசம்பர் 18 ஆம் தேதியுடன் 59 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.