தன்னை யார் என்று கூறாமல் பெண்ணிடம் பேசிய எம்ஜிஆர் – அடுத்து நடந்த டுவிஸ்ட்!
தமிழ் சினிமாவில் நட்சத்திர நாயகனாக வலம் வந்தவர் நடிகர் எம்ஜிஆர். இவர் நடிகர் மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார். இவருடைய வாழ்க்கையில், நடிப்பும், அரசியலும் முக்கியமாக இருந்தது. இவர் இளமை காலத்திலிருந்தே பல நாடக குழுக்களில் நடித்தார்.
இவருக்கு காந்தி மேல் பற்று அதிகம். இதனால்,எம்ஜிஆர் இளமையாக இருக்கும்போதே இந்திய நேஷனல் காங்கிரஸில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
சினிமாவில் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்தினார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டப்பிறகு, அவரது சொந்தக் கட்சியான அ.தி.மு.கவை உருவாக்கினார். மக்கள் எம்.ஜி.ஆரை மிகவும் நேசித்தனர். எம்ஜிஆர் ஏழை மக்களின் இதய தெய்வமாக விளங்கினார்.
எம்ஜிஆர் குறித்த ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
எம்ஜிஆர் தாய் பத்திரிக்கை எனும் ஒரு பத்திரிக்கை நிறுவனத்தை நடத்தினார். இந்தப் பத்திரிகையில் ஆசிரியராக இருந்தவர் வலம்புரி ஜான். இவருக்கு எம்ஜிஆர் ஒருமுறை கால் செய்துள்ளார். அப்போது, வீட்டு வேலைக்காரி போனை எடுத்துள்ளார். அவரிடம் எம்.ஜிஆர் தன்னை எம்.ஜி.ஆர் என்று சொல்லாமல் எம்.ஜி.ராமசந்திரன் பேசுகிறேன் என்று கூறினார். அதற்கு அப்பெண் சார்…. ஐயா இப்போதான் ஆபிஸ் கிளம்பினார் என்று கூறியுள்ளார்.
அதற்கு ‘நீ யார் பேசுவது?’ என்று எம்ஜிஆர் கேட்க, அதற்கு அப்பெண் ‘இந்த வீட்டின் வேலைக்கார பெண் என்று கூறியுள்ளார். எம்.ஜி.ஆர் அப்பெண்ணிடம் உன் பெயர் என்ன என கேட்டுள்ளார். அதற்கு அப்பெண் என பெயர் லட்சுமி என்று கூறியுள்ளார். எல்லா விவரத்தையும் கேட்டுவிட்டு, சரி நான் போன் செய்தேன் என ஜான் வந்ததும் சொல்லிவிடு என்று போனை வைத்துவிட்டார்.
இந்த தகவலை ஜான் வந்ததும் அப்பெண் அவரிடம் கூறினாராம். அதற்கு ஜான் நீ யாரிடம் பேசுனீங்கன்னு தெரியுமா என்று கேட்டதற்கு, அந்தப் பெண் முழித்தாராம். நீ பேசுனது யாரும் இல்லை எம்ஜிஆர் தான் என்று கூறினாராம். ஆனால் அப்பெண் நம்ப மறுத்துவிட்டாராம். உடனே, எம்ஜிஆர் கொடுத்து அனுப்பின பணத்தை அப்பெண்ணிடம் கொடுத்தபோதுதான் பேசியது எம்.ஜி.ஆர் என்று நம்பினாராம். நன்றி தெரிவித்தாராம்.