சூப்பர் ஸ்டார் நடிகரை பார்த்து பயந்த எம்ஜிஆர்..!!அவருக்கே இப்படி ஒரு நிலைமையா..??

0
881
MGR was scared of the superstar actor..!!Is this a situation for him??
MGR was scared of the superstar actor..!!Is this a situation for him??

சூப்பர் ஸ்டார் நடிகரை பார்த்து பயந்த எம்ஜிஆர்..!!அவருக்கே இப்படி ஒரு நிலைமையா..??

தமிழ் சினிமாவின் அடையாளமாகவே திகழ்ந்தவர்கள் தான் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன். ஆனால் சிவாஜியை போல் எம்ஜிஆர் முதல் படத்திலேயே ஹீரோவாக நடித்துவிடவில்லை. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக கிடைத்த சின்ன சின்ன வேடங்களில் நடித்து அதன் பின்னரே எம்ஜிஆர் ஹீரோவானார். 

ஆனால் அந்த ஹீரோ வாய்ப்பு பறிபோய் விடுமோ என எம்ஜிஆர் பயந்துள்ள சம்பவமும் நடந்துள்ளது. அதாவது எம்ஜிஆர் பல போராட்டங்களுக்கு பின்னர் சாயா என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்து சில நாட்கள் ஷூட்டிங்கும் நடந்துள்ளது. ஆனாலும் நம்மை எந்த நேரத்திலும் தூக்கி விடுவார்களோ என்ற பயத்திலேயே எம்ஜிஆர் இருந்து வந்தாராம். 

அந்த சமயத்தில் அப்போது சூப்பர் ஸ்டார் பியூ சின்னப்பா படப்பிடிப்பு தளத்திற்கு வந்து செல்ல அருகில் இருந்தவர்கள் அவ்வளவு தான் இனி சின்னப்பா தான் படத்தின் ஹீரோ நீ கிடையாது என்று கூறியுள்ளார்கள். ஆனால் அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் பியூ சின்னப்பா நடிக்க மறுத்து விட்டார். இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக சாயா படம் பாதியில் நின்று போனது. 

அப்போது இயக்குனர் ஏஎஸ்ஏ சாமி தான் எம்ஜிஆர் மீது நம்பிக்கை வைத்து அவரை ராஜகுமாரி என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்து வைத்தார். தயாரிப்பாளர் தியாகராஜ பாகவதரையும், பானுமதியையும் நடிக்க வைக்க கூறியுள்ளார். ஆனால் ஏஎஸ்ஏ சாமியோ எனக்கு எம்ஜிஆர் மட்டும் போதும். நான் நிச்சயம் இந்த படத்தை ஹிட் கொடுப்பேன் என்று கூறி ஹிட் கொடுத்தார். அதன் பின்னர் எம்ஜிஆர் புரட்சி தலைவராக மாறியதெல்லாம் வரலாறு. 

Previous articleஒரு நாளைக்கு மட்டும் லட்சங்களில் சம்பளம் வாங்கும் விஜய் டிவி சீரியல் நடிகை..!!
Next articleதமிழகத்தில் தாமரை மலருமா..??கருத்து கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன..??