ஐபிஎல் தொடரில் மும்பையிலுள்ள பிரபோர்ன் மைதானத்தில் நேற்றைய தினம் நடந்த 51வது லீக் போட்டியில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோதின டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதனடிப்படையில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் சேர்த்தது. இஷான் கிஷன் 45 ரன்கள் மற்றும் ரோஹித் சர்மா 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய டேவிட் 21 பந்தில் 44 ரன்களை சேர்த்து களத்திலிருந்தார்.
இதனைத் தொடர்ந்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் அணி களம் புகுந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான விருத்திமான் சஹா, சுப்மன் கில், உள்ளிட்டோர் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தனர்.
அணியின் எண்ணிக்கை 108 இருந்த சமயத்தில் சுப்மன் 52 ரன்னில் வெளியேறினார். சற்று நேரத்தில் 55 ரன்கள் சேர்த்து தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார் சஹா அடுத்ததாக களமிறங்கிய சாய் சுதர்சன் 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அந்த அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பொறுப்புடன் விளையாடி 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கடைசியில் குஜராத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலமாக மும்பை அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது மும்பை அணி பெறும் 2வது வெற்றியாகும் என சொல்லப்படுகிறது.