உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கை! திட்டவட்டமாக மறுத்த இந்திய அரசு!

0
101

உலகம் முழுவதும் நோய் தொற்று பரவல் காரணமாக, உயிரிழந்தவர்கள் தொடர்பாக புள்ளிவிவரங்கள் உள்ளிட்டவற்றை உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

அதில் உலகம் முழுவதும் 1.50 லட்சத்திற்கும் மேலாக மனித உயிர்கள் பறிபோயிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அரசுகள் வழங்கிய தகவலுடன் ஒப்பிடும் போது இது 2 மடங்குக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக இந்தியாவில் 47 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகி இருப்பதாகவும், இது இந்திய அரசு வழங்கி இருக்கின்ற தகவலுடன் ஒப்பிடும்போது 10 மடங்கு அதிகமாகும் என்றும், உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

இப்படியான நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் இந்த அறிக்கையை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்திருகிறது.

இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவர் டாக்டர் வால்டர் பார்கவா நம்முடைய நாட்டில் திட்டமிட்ட ரீதியில் தரவுகளை சேகரிக்கும் முறை அமலிலிருக்கிறது.

ஆகவே உலக சுகாதார நிறுவனத்தின் மேம்போக்கான பத்திரிக்கை அறிக்கையை நம்ப வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.

நோய் தொற்று மரணங்கள் ஏற்பட ஆரம்பித்தபோது அது தொடர்பான வரையறை நம்மிடம் இருக்கவில்லை. அப்போது உலக சுகாதார நிறுவனத்திடமும் அத்தகைய வரையறை இல்லையென தெரிவித்திருக்கிறார்.

நோய்த்தொற்று தடுப்பூசி தொடர்பான தரவுகளையும் திட்டமிட்ட ரீதியில் நாம் சேமித்து வருகிறோம். 130 கோடி தரவுகள் சேகரிக்க பெற்றிருக்கிறது. நாம் இதுவரை 190 கோடி தவணைகள் நோய்த்தொற்று தடுப்பூசிகளை செலுத்தியிருக்கின்றோம் என கூறியிருக்கிறார்.

நம்மிடமுள்ள தரவுகள் நம்பகத் தன்மை மிக்கவை. ஆகவே உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை என அவர் கூறியுள்ளார்.